மேலும் அறிய
Advertisement
செங்கல்பட்டு : ஒரு மாதத்தில் 1,058 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 43 ஆயிரத்து 193 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு. 1058 நபர்கள் உயிரிழப்பு.
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் மையப்பகுதியில் இருந்து வேகமாக பரவத் துவங்கியது. இதன் எதிரொலியாக மார்ச் 14-ஆம் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை மீண்டும் துவங்கியது மாவட்ட நிர்வாகம் .
மார்ச் மாதம் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து, மார்ச் மாதம் 31-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 250ஐ தாண்டியது. அப்போது தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500.
இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்த வண்ணமே இருந்தது. தேர்தலுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்தது , ஏப்ரல் 10-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியது.
சென்னை புறநகர் மாவட்டமாக இருந்த செங்கல்பட்டு தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்தது. ஏப்ரல் 17-ஆம் தேதி செங்கல்பட்டில் நாள் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
இதன் எதிரொலியாக மாவட்டத்தில் இருந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் மிக வேகமாக நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதிகள் தேவைப்பட்டது. இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மே 4-ஆம் தேதி நள்ளிரவில் ஆக்ஸிஜன் அளவு குறைந்த காரணத்தினால் பிரஷர் டிராப் ஏற்பட்டு 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் மாவட்ட நிர்வாகம் விழி பிதுங்கியிருந்தது.
இதனையடுத்து மே மாதம் ஆறாம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் மேல் பதிவாகியது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பல இடங்களில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர் . அதேபோல் மே மாதம் 13-ஆம் தேதி நாளொன்றுக்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500-ஐ தொட்டது. அந்த சமயத்தில் படுக்கைகள் கிடைக்காமல் 5 மணிநேரத்திற்கும் மேலாக ஆம்புலன்சில் காத்திருக்கவேண்டிய நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டனர்.
இந்த சமயத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மே மாதம் 22-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரானா பாதிப்பு 1954 என குறையத் துவங்கியது. தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை செங்கல்பட்டு மாவட்டத்தில் குறைந்த வண்ணமே உள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 193. அதேபோல் கடந்த ஒரு மாதத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 58 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த மே மாதம் 27-ஆம் தேதி, ஒரே நாளில் 52 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151228 , இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 144811 தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 4205 இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 -ஆக இருந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 389749 நபர்கள் கொரோனா தடுப்பு ஊசிபோட்டுள்ளனர். இதில் முதல் டோஸ் எடுத்தவர்களின் எண்ணிக்கை 306011, இரண்டாம் டோஸ் எடுத்தவர்களின் எண்ணிக்கை 83738-ஆக உள்ளது
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion