மேலும் அறிய

Tamilnadu Corona Update: தமிழ்நாட்டில் 1,808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 22 பேர் உயிரிழப்பு!

கொரோனாவால் மேலும் 27 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,889 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 808  நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,44,219 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,808 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உள்ளது. 

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 48 ஆயிரத்து 497 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 37 ஆயிரத்து 006 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 126 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 126 ஆகக் குறைந்துள்ளது. 

கோவை 169, ஈரோடு 130, தஞ்சை 98, சேலம் 105, திருப்பூர் 93, செங்கல்பட்டு 99, கடலூர் 75, திருச்சி 62, திருவண்ணாமலை 72, திருவள்ளூர் 70, நாமக்கல் 51, கள்ளக்குறிச்சி 42, காஞ்சிபுரம் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவால் மேலும் 22 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,911 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 19 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 1 நபர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் மொத்தம் இதுவரை 8309 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக கோவையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 27 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 23,364 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,447 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,91,222 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

12 வயதிற்குட்பட்ட 90 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 39347 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25763 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7830 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசிய என்ன?
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசிய என்ன?
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Petrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசிய என்ன?
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசிய என்ன?
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
Rain Alert : வாட்டி வதைக்கும் வெயில்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை.. ஆரஞ்சு அலட் எச்சரிக்கை..
Rain Alert : வாட்டி வதைக்கும் வெயில்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை.. ஆரஞ்சு அலட் எச்சரிக்கை..
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
Embed widget