மேலும் அறிய
Advertisement
திருவண்ணாமலை மாவட்டத்தில் 174 பேருக்கு கொரோனா; 3 பேர் உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 174 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் இறந்துள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை மாவட்டத்தில் 49 ஆயிரத்து 699 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 47ஆயிரத்து 939 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 175 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 3 நபர்கள். இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 602 ஆக உயர்ந்துள்ளது .
மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் , தண்டரம்பட்டு , ஆரணி , செய்யார், வந்தவாசி , போளுர் , உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 1158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக படிபடியாக கொரோனா தொற்று உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion