திருமணமான 9 மாதத்திலே குழந்தை பிறக்குமா? மருத்துவர் சொல்வது என்ன?
திருமணம் ஆன 9 மாதத்தில் குழந்தை பிறப்பது சாத்தியமா? என்பது குறித்து மருத்துவர் ஜெயஸ்ரீ சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

திருமணம் ஆன தம்பதிகளுக்கு ஒரு வருடம் கழித்தோ அல்லது சில வருடங்களிலோ குழந்தை பிறப்பது இயல்பான ஒன்றாகும். சில தம்பதியினருக்கு அவர்களது முதலாம் ஆண்டு திருமண நாளுக்கு முன்பாகவே குழந்தை பிறந்துவிடும். இது பலருக்கும் குழப்பத்தை உண்டாக்கலாம். இதைப் பற்றி புரிதல் இல்லாத சிலர் அவர்களை தவறாக பேசுவதும் உண்டு.
திருமணம் ஆன 9 மாதத்தில் குழந்தை பிறக்குமா?
மருத்துவப்படி இது சாத்தியமா? என்றால் இது சாத்தியமே ஆகும். இதுகுறித்து மருத்துவர் ஜெயஸ்ரீ விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். அவர் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது,
திருமணம் ஆகி 9 மாதத்தில் குழந்தைப் பிறப்பது சாத்தியமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அது சாத்தியமே உதாரணத்திற்கு ஒருவருக்கு திருமணம் 15ம் தேதி நடக்கிறது. அந்த பெண்ணுக்கு மாதவிடாய் அடுத்த மாதம் 1ம் தேதி நாள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, அவர்களுக்கு திருமணம் ஆவது என்பது கருத்தரிக்கும் காலத்தில்தான் திருமணம் ஆகிறது.
சாத்தியமே:
அந்த சமயத்திலே அவர்கள் கருத்தரித்துவிட்டால், அவர்கள் திருமணம் ஆகி 9 மாதத்திற்கு முன்பே அவர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. இதனால், இது மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் சாத்தியமே ஆகும். இது பயப்பட வேண்டியது ஏதும் இல்லை. சிலர் அச்சப்படுவார்கள். திருமணமான தேதி 15ம் தேதி. மாதவிடாய் வரும் தேதி 1ம் தேதி. அதில் இருந்து பிரசவ காலம் தொடங்கிவிடும். இதனால், 9 மாதத்திற்கு முன்பே பிரசவம் நடந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறியிருப்பார்.
மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த தம்பதியினர் பலரும் தங்களது முதலாம் ஆண்டு திருமணத்திற்கு முன்பே தங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டதாக பதிவிட்டு வருகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















