வெந்நீரில் இவ்வளவு நன்மைகளா… இதை தெரிந்துகொண்டால் சாதாரண நீரை குடிக்கவே மாட்டீர்கள்!
சூடான நீரைக் குடிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் அது தீக்காயங்கள் அல்லது வடுக்களை ஏற்படுத்தும். மிதமான சூட்டில் குடிப்பது உடலுக்கு பல நன்மைகளை சேர்க்கும். அதன் சில நன்மைகள் இங்கே:
சூடான நீரை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடை குறைப்பு, செரிமானம், நீரேற்றம், ஆகிய கிடைப்பதாக பரிந்துரைக்கப்படுகிறது.
வெந்நீர் நன்மைகள்
வெந்நீர் குடிப்பது உடலில் எந்தந்த வகையில் பயனளிக்கும் என்பது குறித்து தெரிந்தவர்கள் யாரும் அதன் பின் சாதாரண நீரை குடிக்க மாட்டார்கள். வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்று நாம் அடிக்கடி அறிவுரைகள் பெற்றிருப்போம். வெயில் காலத்தில் கூட சூடாக நீர் குடித்தல்தான் சிறந்தது என்று கூறப்படுகிறது. உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் இந்த வெந்நீரின் பயன் தான் என்ன? இரவு உணவுக்குப் பிறகு அல்லது அதற்கு முன் சாப்பிடலாமா? சமச்சீர் உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி தரும் நன்மைகளை வெந்நீரைக் குடிப்பதால் மட்டுமே பெற முடியாது என்பது தெளிவு. ஆனால், சூடான நீரைக் குடிக்கும்போது எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் அது தீக்காயங்கள் அல்லது வடுக்களை ஏற்படுத்தும். மிதமான சூட்டில் குடிப்பது உடலுக்கு பல நன்மைகளை சேர்க்கும். அதன் சில நன்மைகள் இங்கே:
செரிமானத்திற்கு உதவுகிறது
சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், உணவை விரைவாக உடைப்பது எளிதாகிறது. இது ஊட்டச்சத்துக்களை எளிதாக எல்லா உடல் பகுதிகளுக்கும் விநியோகிக்க உதவுகிறது. வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்பதற்கான மற்றொரு காரணம், அது மலச்சிக்கலையும் தடுக்க உதவுகிறது.
நீரேற்றத்தை மேம்படுத்துகிறது
சூடான நீர் நச்சுகளுக்கு எதிராக செயல்படுகிறது மற்றும் உங்கள் உடலை நச்சுத்தன்மையற்றதாக மாற்றுகிறது. உணவுக்குப் பிறகு சூடான நீரை குடித்தால், செரிமானத்தின் போது இழந்த திரவங்களை நிரப்பவும், உங்கள் உடலை ஹைட்ரேட் செய்யவும் உதவுகிறது.
எடை இழப்பிற்கு உதவுகிறது
பல நிபுணர்கள் உடல் எடையை குறைக்க, உணவுக்குப் பிறகு வெந்நீரைக் குடிக்க பரிந்துரைக்கின்றனர். உணவு உண்பதற்கு முன் வெந்நீரைக் குடிப்பதால் வளர்சிதை மாற்றம் 32 சதவிகிதம் அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எனவே எடையை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்கள், வெந்நீரை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.
மாதவிடாய் வலியைக் குறைக்கிறது
மாதவிடாய் காலத்தில் வெந்நீர் பைகளை வைத்து வயிற்றில் ஒத்தடம் கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்க கேட்டிருப்போம். அதே அறிவியல்தான் இதுவும். உணவுக்குப் பிறகு வெந்நீரைக் குடிப்பது கருப்பையின் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் கடினமான தசைகளை எளிதாக்க உதவுகிறது. சூடான நீர் ஒரு வாசோடைலேட்டர் என்று அழைக்கப்படுகிறது. இரத்த நுண்குழாய்களை விரிவுபடுத்துவதன் மூலம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வலியை குறைக்க சூடான நீரை குடிக்கலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )