காரணம் அறியப்படாத நெஞ்சுவலிக்கு நவீன முறையில் தீர்வு: பெண் நோயாளிக்கு முதல்முறையாக வெற்றிகர சிகிச்சை...அப்போலோ மருத்துவமனையின் புதிய சாதனை
இதயத்தின் மிகச்சிறிய இரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்பை (CMD) நவீன கருவி மூலம் கண்டறிந்து நெஞ்சுவலிக்கு தீர்வு

காரணம் அறியப்படாத நெஞ்சுவலிக்கு நவீன முறையில் அறுவை சிகிச்சையின்றி, துல்லிய சிகிச்சை மூலம் விரைவாக குணமடைய உதவும் புதிய செயல்முறையை அப்போலோ மருத்துவமனை செய்து வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, 'இதய நுண் இரத்தக்குழாய் செயலிழப்பு' (CMD) எனப்படும் பாதிப்பை நவீன முறையில் கண்டறிந்து, ஒரு பெண்ணுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது. சென்னையில் இத்தகைய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
அடைப்பு இல்லாத இரத்த நாள நெஞ்சுவலி
62 வயதான ஒரு பெண்மணி, கடந்த சில மாதங்களாக கடுமையான நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்குச் செய்யப்பட்ட 'ஆஞ்சியோகிராம்' (Angiogram) பரிசோதனையில் இதயத்தின் பெரிய இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏதும் இல்லை என்று வந்தது. ஆனாலும் அப்பெண்ணுக்கு நெஞ்சு வலி தொடர்ந்து இருந்து வந்தது.
பொதுவாக இரத்த நாளங்களில் அடைப்பு இருந்தால் மட்டுமே நெஞ்சுவலி வரும் என்று கருதப்படுகிறது. ஆனால், சிலருக்கு பெரிய குழாய்களில் அடைப்பு இல்லாவிட்டாலும், மிகச்சிறிய நுண் இரத்தக்குழாய்களில் பாதிப்பு இருக்கலாம். இது 'அடைப்பு இல்லாத இரத்த நாள நெஞ்சுவலி' (ANOCA) என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் கொண்ட பெண்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது.
அப்போலோ மருத்துவர்கள், ஒரு பிரத்யேக மெல்லிய கம்பியைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணுக்கு CMD மதிப்பாய்வை செய்தனர். இதன் மூலம் சாதாரண ஆஞ்சியோகிராமில் தெரியாத நுண்ணிய இரத்தக்குழாய் பாதிப்புகள் அவருக்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இதன்பின் இப்பிரச்சனைக்கு மருந்துகளுடன் துல்லியமான சிகிச்சை வழங்கப்பட்டதால், ஒரே நாளில் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
மருத்துவர் விளக்கம்
இது குறித்து டாக்டர் ரிஃபாய் சௌகத் அலி (முதுநிலை இதய சிகிச்சை நிபுணர்) கூறுகையில்: "ஆஞ்சியோகிராம் முடிவுகள் 'நார்மல்' என்று வந்த பிறகும் பல நோயாளிகள், குறிப்பாக பெண்கள், தொடர்ந்து நெஞ்சுவலியால் அவதிப்படுகிறார்கள். இந்த நவீனத் தொழில்நுட்பம், நெஞ்சு வலிக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உதவுகிறது. இந்த நவீன நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை செயல்முறையின் உதவியால், அறுவை சிகிச்சை இல்லாமலேயே 24 மணி நேரத்திற்குள் நோயாளி பிரச்சனையிலிருந்து விடுபட்டு, நலமுடன் வீடு திரும்ப முடியும் என்பது இதன் சிறப்பு. இந்நோயாளிக்கு இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையின் காரணமாக அறுவை சிகிச்சையோ, தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்போ அல்லது நீண்ட நாள் மருத்துவமனையில் தங்குவதோ அவருக்குத் தேவைப்படவில்லை." என்றார்.
துல்லியமான சிகிச்சை:
அப்போலோ மருத்துவமனையின் சென்னை பிராந்திய தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி கூறுகையில், "சென்னையில் CMD பாதிப்புக்கான மதிப்பாய்வை வழங்கும் முதல் மருத்துவமனைகளில் ஒன்றாக அப்போலோ மருத்துவமனை திகழ்கிறது. துல்லிய மருத்துவம் மற்றும் நோயாளியின் நலனை மையமாகக் கொண்ட சிகிச்சை பராமரிப்பு ஆகியவற்றில் எங்களின் அர்ப்பணிப்பிற்கு இந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த மேம்பட்ட நோயறிதல் முறை, சிக்கலான நெஞ்சு வலியை விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிந்து, நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையும், குணமடைதலும் கிடைப்பதை சாத்தியமாக்குகிறது," என்றார்.
"காரணம் அறியப்படாத நெஞ்சு வலியால் அவதிப்படுபவர்கள் முறையாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். துல்லியமான நோயறிதலே பயனளிக்கும் சிகிச்சைக்கு அடிப்படையான அம்சம்" என்று டாக்டர் ரிஃபாய் சௌகத் அலி மேலும் குறிப்பிட்டார்.
அப்போலோ மருத்துவமனைகள் பற்றி:
1983-ம் ஆண்டில் டாக்டர் பிரதாப் ரெட்டி அவர்களால் சென்னையில் தொடங்கப்பட்ட அப்போலோ குழுமத்தின் முதல் மருத்துவமனை, இன்று உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரத் தளமாக வளர்ந்துள்ளது. 74 மருத்துவமனைகள், 10,400-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 6,600-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் மற்றும் 2,182 நோயறிதல் மையங்களுடன் இது உலகளவில் சுகாதாரத் துறையில் முன்னணி வகிக்கிறது. இதய சிகிச்சையில் 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் 2,00,000 அறுவை சிகிச்சைகளைச் செய்து உலகளவில் நவீன அப்போலோ சாதனைப் தொழில்நுட்பங்களையும், சாதனங்களையும், படைத்திருக்கிறது. சிகிச்சை நெறிமுறைகளையும் கொண்டு சிகிச்சை வழங்குவதற்கு ஆராய்ச்சியிலும், புத்தாக்க கண்டுபிடிப்பிலும் அப்போலோ தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அப்போலோ குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள், நோயாளிகளுக்கு மிகச் சிறப்பான சிகிச்சை பலனை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றன.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















