சுய இன்பம் செய்யும் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
சுய இன்பம் (Mastrubation) ஆரோக்கியமானது என்கிறார்கள் பாலியல் நிபுணர்கள். அது பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து முக்கியத் தகவல்கள்..
சுய இன்பம் (Mastrubation) பற்றி ஆண்கள் அதிகமாக பேசினாலும் பெண்களும் சுய இன்பத்தில் ஈடுபடுவது உண்டு. 18-49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் பாதிபேர் குறைந்தது மூன்றுமாதத்துக்கு ஒருமுறையேனும் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் சுய இன்பம் குறித்து எல்லோருக்கும் ஒரே மாதிரியான பார்வை இருப்பதில்லை. பெண்களில் சிலர் தன்னைத் தானே தொட்டுக் கொள்ளத் தயங்குவதும் இதனால்தான். ஆனால் சுய இன்பம் ஆரோக்கியமானது என்கிறார்கள் பாலியல் நிபுணர்கள். அது பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து முக்கியத் தகவல்கள்..
1. உங்கள் உடலுக்கு நல்லது
சுய இன்பம் செய்வதால் உங்கள் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் இதனால் மூளையில் எண்டார்பின் சுரப்பும் அதிகரிக்கும். இதனால் அன்றைய தினம் ஸ்ட்ரெஸ்ஸாகத் தொடங்கும் உங்கள் நாள் தெளிவாக மாறும். சுய இன்பம் செய்வதால் மன உளைச்சல் தனியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
2. உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கும் நல்லது
சுய இன்பம் செக்ஸ் ரீதியாகவும் உங்களை கம்ஃபர்டபிளாகவும் நம்பிக்கை மிக்கவராகவும் மாற்றும். உடலுறவு குறித்த உங்களது ஆசைகளை உங்களுக்குப் புரிய வைக்கும். உங்கள் உடல் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்தும். உங்கள் மனதுடன் நெருக்கமாக உங்கள் உடலுடன் நீங்கள் நெருக்கமாக வேண்டியது அவசியம். சுய இன்பம் வழியாக உடலுடன் புதிய பரிசோதனைகளில் ஈடுபடுவது உங்கள் பார்ட்னருடனான உடலுறவிலும் உங்களை பாஸிட்டிவ்வானவராக்கும்.
3. மாதவிடாய் நின்றுபோவதற்குப் பிறகான செக்ஸ் வாழ்க்கையை சீர் ஆக்கும்
மாதவிடாய் நின்று போகும் என்றாலே அதோடு தனது செக்ஸ் வாழ்க்கையும் முடிந்துபோகும் என பல பெண்கள் நினைத்துவிடுவார்கள். மாதவிடாய் நின்றுபோதல் தொடர்பான மன அழுத்தமும் உடலுறவு வைத்துக்கொள்ள முடியாது என்கிற தவறான புரிதல் தரும் மன அழுத்தமும் பெரிதாக இங்கே விவாதிக்கப்படுவதில்லை. ஆனால் சுய இன்பம் செய்வது இந்த இரண்டு மன அழுத்தத்திலிருந்தும் ரிலாக்ஸ் செய்ய உதவும்.
4. உடலுறவு போல வேகமாக முடியவேண்டும் என்பதில்லை
உடலுறவு என்றாலே பார்ட்னர் விருப்பத்துக்கு ஏற்பவும் இருக்க வேண்டும்.இதனால் மற்றவர் நிறைய விட்டுக்கொடுக்க வேண்டி வரும். ஆனால் சுய இன்பம் செய்வது நமக்கு ஏற்றதுபோல அமைத்துக்கொள்ளலாம். உச்ச அடையவேண்டும் என்கிற எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வெறும் தொடுதல் மட்டுமே சிலருக்குப் போதுமானதாக இருக்கும். அதற்கேற்ற வகையிலும் அமைத்துக் கொள்ளலாம்.
5. செக்ஸுக்கான கருவிகள் உதவக்கூடும்
செக்ஸில் மிகக் குறைவாக விவாதிக்கப்படுபவை செக்ஸ் கருவிகள் (Sex toys). சுய இன்பம் செய்துகொள்ள கைகளை உபயோகிப்பது தயக்கமாக இருப்பவர்கள் அதற்கான டில்டோ அல்லது வைப்ரேட்டர்(Dildo or Vibrator) போன்ற கருவிகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. அதனை உபயோகப்படுத்தலாம்.இப்படியான கருவிகள் இருப்பதே பலருக்குத் தெரியாது என்னும் நிலையில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாகிறது. உங்களுக்கு ஆர்காசம் செய்வதில் சிக்கல் இருந்தாலோ உச்சமடைய வேண்டும் எனத் தோன்றினாலோ அதுபோன்ற நேரங்களில் வைப்ரேட்டர் கைகொடுக்கும். மேலும் இது எந்தவிதமான செக்ஸ் பிரச்னைகளையும் ஏற்படுத்தாது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )