Costliest Condom: உலகின் விலையுயர்ந்த காண்டம் - அப்படி என்ன ஸ்பெஷல்? இப்படியெல்லாமா செய்வாங்க?
Costliest Condom: உலகின் விலையுயர்ந்த காண்டம் அதாவது ஆணுறையின் சிறப்பு என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Costliest Condom: உலகின் விலையுயர்ந்த காண்டமின் மதிப்பு, துபாயில் உள்ள 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் ஒருநாள் தங்குவதற்கான கட்டணத்திற்கு ஈடானதாகும்.
உலகின் விலையுயர்ந்த ஆணுறை:
கடந்த சில ஆண்டுகளில் சர்வதேச அளவில் ஆணுறைகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் வயது தம்பதிகளிடையே திட்டமிடலற்ற கருவுறுதலை தவிர்க்க அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கருவுறுதல் மட்டுமின்றி நோய் பரவலை தடுக்க ஆண்களை விட பெண்களே உடலுறவின் போது உறைகளை அதிகம் பயண்டுத்துவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. சந்தையில் பல்வேறு வகையான ஆணுறைகள் உள்ளன, அவற்றின் விலை அவற்றின் தரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில், துபாயில் உள்ள ஐந்து நட்சத்திர அர்மானி ஹோட்டலில் ஒரு இரவை கழிக்கதற்கு ஈடான கட்டணத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆணுறை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
200 ஆண்டுகள் பழமையான ஆணுறை:
உலகின் மிக விலையுயர்ந்த இந்த ஆணுறை 200 ஆண்டுகள் பழமையானது. வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, இந்த ஆணுறை செம்மறி ஆடுகளின் குடலில் இருந்து தயாரிக்கப்பட்டது. அண்மையில் ஸ்பெயினில் நடந்த ஏலத்தில் சுமார் ரூ.44,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், ரூ.44,000க்கு விற்கப்படும் இந்த ஆணுறை, இயற்கை சவ்வு ஆணுறை என குறிப்பிடப்படுகிறது. இந்த விலையானது துபாயில் உள்ள ஐந்து நட்சத்திர அர்மானி ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்குச் சமமானதாகும். துபாயில் உள்ள ஐந்து நட்சத்திர அர்மானி ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கான ஆரம்ப விலை சுமார் ரூ.38,000 முதல் ரூ.40,000 வரை என்பது குறிப்பிடத்தக்கது.
ஃப்ரான்ஸ் ஆணுறையின் சிறப்பு என்ன?
இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆணுறை ஃப்ரான்சில் கண்டுபிடிக்கப்பட்டது. 19 செ.மீ. அதாவது 7 அங்குலம் நீளத்திலான ஆணுறையை ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த ஒருவர் தான் கடும் போட்டிக்கு மத்தியில் இந்திய ரூபாய் மதிப்பில் 44 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் சொந்தமாக்கினார். இதன் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இது கையால் செய்யப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் செய்வது மிகவும் கடினமான பணியாகும்.
18 ஆம் நூற்றாண்டில், இத்தகைய ஆணுறைகள் செம்மறி ஆடுகள், பன்றிகள், கன்றுகள் மற்றும் ஆடுகளின் குடலில் இருந்து தயாரிக்கப்பட்டன. அந்தக் காலத்தில் இந்த வகை ஆணுறை தனித்துவமானது, காரணம் அந்தக் காலத்தில் மக்களுக்கு ஆணுறை மற்றும் கருத்தடை சாதனங்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. இதனால் மிகக் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்யப்பட்டாதால், இயற்கையான பொருட்களால் ஆன அந்த ஆணுறைகள் விலை உயர்ந்ததாக இருந்தன. பணக்காரர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயாரிப்பு எப்படி?
இந்த ஆணுறைகள் ஆட்டுக்குட்டியின் பெருங்குடலின் தொடக்கத்தில் அமைந்துள்ள ஒரு பையான சீகம் என்பதிலிருந்து தயாரிக்கப்பட்டன. அவை இயற்கையான மற்றும் நெருக்கமான உணர்வை வழங்கினாலும், நவீன லேடெக்ஸ் ஆணுறைகளுடன் ஒப்பிடும்போது ஆட்டுக்கறி ஆணுறைகள் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STIs) பரவுவதைத் தடுப்பதில் குறைவான செயல்திறன் கொண்டவை என கூறப்படுகிறது.
தற்போது மிகவும் விலையுயர்ந்த காண்டம் எது?
19 ஆம் நூற்றாண்டில், மலிவான ரப்பர் ஆணுறைகள் பரவலாகக் கிடைக்க தொடங்கிய பிறகு தான், கருத்தடைக்காக விலங்கு குடல்களைப் பயன்படுத்துவது பிரபலமில்லாமல் போனது. தற்போது சந்தையில் கிடைக்கும் மிகவும் விலையுயர்ந்த ஆணுறை பற்றி நாம் பேசினால், அது SKYN சுப்ரீம் ஃபீல் ஆணுறைகளாகும். இதில் 10 துண்டுகளை வாங்கினால், மொத்தம் 100 டாலர்கள், அதாவது தோராயமாக 8,300 இந்திய ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும்.





















