உணவில் அடிக்கடி முட்டை சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
முட்டையில் புரதம், வைட்டமின் A, B, D, E, K, இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.
அதேசமயம் அதிக முட்டை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறும் கட்டுக்கதைக்குப் பின்னால் உள்ள மருத்துவ ஆராய்ச்சி பற்றி காணலாம்.
வயதானவர்களின் ஆரோக்கியத்தை கண்காணித்து(ASPREE ஆய்வு), ஒரு தொடர்ச்சியான ஆய்வின் தரவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
8000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற அவர்களின் ஆய்வில் வாரம் 1-6 முட்டை சாப்பிடுபவர்களுக்கான இறக்கும் அபாயம் எப்போதாவதோ அல்லது குறைவாகவோ அல்லது சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என தெரியவந்துள்ளது.
ஒரு ஆரோக்கியமான நபர் தினசரி இரண்டு முதல் மூன்று முட்டைகளை உட்கொள்ள வேண்டும் என்று நிபுனர்கள் கூறுகின்றனர்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அதிக புரதம் தேவை என்பதால் நான்கு முதல் ஐந்து முட்டைகள் சாப்பிடலாம் என்று கூறுகின்றனர்.
தினமும் முட்டை சாப்பிடுபவர்கள் முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று நிபுனர்கள் கூறுகின்றனர்.
கொழுப்பு பிரச்சனை உள்ளவர்கள் முட்டை உண்பதை குறைக்க வேண்டும் அல்லது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.