Fact Check: வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி போட்டு உடைக்கும் வீடியோ? உண்மை என்ன?
Fact Check: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது, வாக்காளர் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கிப்போட்டு உடைப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Fact Check: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை, உடைப்பது போன்று பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
வீடியோவில் இருப்பது என்ன?
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விறுவிப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, நேற்று 13 மாநிலங்கள் மற்றும் யூன்யன் பிரதேசங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. கர்நாடகாவைச் சேர்ந்த 14 மக்களவை தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்படி நடந்தபோது, கர்நாடகாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர் ஒருவர், வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி தரையில் போட்டு உடைத்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தோல்வி பயத்தில் காங்கிரஸ் கட்சியினர் இட்துபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக, பாஜகவினர் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், அந்த வீடியோ மக்களவை தேர்தலின்போது எடுக்கப்பட்டது கிடையாது என்பதே உண்மை.
உண்மை என்ன? சம்பவம் நடந்தது எப்போது?
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ தொடர்பான புகைப்படத்தை கொண்டு, கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்தோம். அதன் முடிவில், வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது தொடர்பான வீடியோ, கடந்த ஆண்டு மே 12ம் தேதி நியூஸ்18 யூ ட்யூப் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் விசாரிக்கையில் சாமுண்டீஸ்வரி சட்டமன்ற தொகுதியில் கடந்த ஆண்டு மே 10-ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. இதைக்கண்டதும் அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர் என்பது உறுதியாகியுள்ளது.
ஆதாரங்கள்:
News18 report, Youtube, May 12, 2023
The Hindu report, May 12, 2023
தீர்ப்பு:
விசாரணையின் முடிவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது, கர்நாடகாவில் வாக்காளர் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கிப்போட்டு உடைப்பது போன்ற இணையத்தில் பரவும் வீடியோ உண்மை இல்லை என்பது உறுதியாகியுள்ளது. தவறான உள்நோக்கத்துடன் அந்த வீடியோ தற்போது பரப்பப்படுகிறது.
மேலும் படிக்க: Fact Check : பிரதமர் லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கியதா? உண்மைத் தகவல் என்ன?
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.