மேலும் அறிய

Fact Check : பிரதமர் லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கியதா? உண்மைத் தகவல் என்ன?

Fact Check : பிரதமர் லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக, இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

Fact Check: பிரதமர் லேப்டாப் வழங்கும் திட்டம் உண்மையா என்பது குறித்து, இந்த செய்தி தொகுப்பில் ஆராய்ந்து அறியலாம்.

பரவும் தகவல் என்ன?

மத்திய அரசு சார்பில் லேப்டாப் வழங்கப்படுவதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ”பிரேக்கிங் நியூஸ்! PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது. எங்கள் திட்டம் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்கு பயனளிக்கும், சொந்த மடிக்கணினிகளை வாங்க இயலவில்லை, ஆனால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஒன்று தேவை என்று கருதுபவர்களுக்கு இந்த திட்டம் உகந்ததாக இருக்கும். அதற்காக விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கியுள்ளது. குறைந்த அளவிலான லேப்டாப்களே கையிருப்பில் உள்ளன" என்ற தகவலுடன் பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாள் என்றும் கூறி சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று https://giftst.vje6zf.top?lma=n87 என்ற லிங்குடன் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

உண்மைத்தன்மை என்ன?

உண்மையில் மத்திய அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் இந்தியாவில் அமலில் உள்ளதா, என்பத கண்டறிய கூகுளில் கீ வேர்ட் சர்ச் செய்தோம். அப்போது, இந்திய அரசாங்கத்தின் சார்பாக அவ்வாறாக எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் தேடுகையில், மத்திய அரசின் AICTE எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்குவதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது தெரியவந்தது. "இத்தகவல் வதந்தி என்றும் AICTE அவ்வாறான எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை” என்றும் AICTE மறுத்துள்ளது.  இது குறித்து ANI கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து, அந்த செய்தியின் இணைய லிங்க்கை ஆய்வு செய்ததில் அதில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது போன்ற புகைப்படம் இருந்தது. அதனை ரிவர்ஸ் இமேஜ் முறையில் சர்ச் செய்து பார்த்தபோது 2023ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அங்கம் வகிக்கும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(Archive) கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், அந்நாட்டில் செயல்படுத்தப்படும் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் என்று இணையதளத்தில் இருந்த அதே புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்(Archive) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமரின் இலவச லேப்டாப் திட்டம் குறித்து காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த லிங்கில் தகவல்களை பதிவு செய்து பார்த்தோம். அப்போது, இந்த தகவலை வாட்ஸ்அப்பில் 15 நண்பர்கள் அல்லது 5 குழுக்களுடன் பகிர்ந்து கொண்டால்" இலவச மடிக்கணினி பெறலாம் கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் இது ஒரு ஊழல் என்பது தெரியவந்தது.

தீர்ப்பு:

நம் தேடலின் முடிவாக பிரதம மந்திரியின் லேப்டாப் திட்டம் 2024 என்று, சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் மற்றும் லிங்க்,  ஒரு ஸ்பேம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newsmeter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பு சற்றே  திருத்தி எழுதப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
Embed widget