மேலும் அறிய

Fact Check: வீட்டு காவலில் பாடகி ஸ்ரேயா கோஷல்? டிவியில் முதலீடு சார்ந்த தகவல்களை சொன்னதால் பரபரப்பு

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் அவரது முதலீடு சார்ந்த தகவல்களை டிவி நிகழ்ச்சியில் சொன்னதால் கைது செய்யப்பட்டார் எனும் செய்தி வெளியானது. இதனுடன் அவரது ரசிகர்கள் அவரை விடுதலை செய்யும்படி போராட்டம் நடத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Claim: தனது முதலீடுகள் தொடர்பான தகவல்களை ஸ்ரேயா கோஷல் வெளியிட்டதால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என பரவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

Fact: தணிக்கையில் முதலீடுகள் தொடர்பாக இணைய மோசடி குழுக்கள் இதுபோன்ற செய்தி நிறுவனங்களின் வடிவங்களை போலியாகப் பயன்படுத்தி இணையவாசிகளை ஏமாற்றும் பணியில் ஈடுபட்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டது.

திரைப்பட பிரபலங்களை வைத்து விளம்பரப் படங்களை எடுப்பது காலங்காலமாக நடந்துவரும் ஒரு நிகழ்வு தான். அவர்களது ரசிகர்கள் தங்கள் தயாரிப்புகளை பயன்படுத்துவர் என்ற நம்பிக்கை நிறுவனங்களுக்கு இருந்தது. ஆனால், தற்போது திரைப்பிரலங்களின் அனுமதி இல்லாமலேயே அவர்கள் படங்கள் டிஜிட்டல் வலைத்தளங்களில் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதுவும், முதலீடு சார்ந்த மோசடி நிறுவனங்கள் இவர்கள் படத்தை பயன்படுத்துகின்றனர்.

சமீபத்தில் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் அவரது முதலீடு சார்ந்த தகவல்களை டிவி நிகழ்ச்சியில் சொன்னதால் கைது செய்யப்பட்டார் எனும் செய்தி வெளியானது. இதனுடன் அவரது ரசிகர்கள் அவரை விடுதலை செய்யும்படி போராட்டம் நடத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எக்ஸ் தளத்தில் பாதி விலை கடை (@halfpricesshop) என்ற சரிபார்க்கப்பட்ட குறியீடு கொண்ட கணக்கில் தான் ஸ்ரேயா கோஷல் சார்ந்த செய்தி பகிரப்பட்டிருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது போல பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட் இருந்தது. அதில் ஸ்ரேயா கோஷல் படமுடன், ரசிகர்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பதாகைகளை ஏந்தி இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

 

உண்மைத் சரிபார்ப்பு: மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் எக்ஸ் பதிவில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்ரேயா கோஷல் தொடர்பான செய்தி ஒரு இணைப்பைக் கொண்டிருந்தது. ‘rugbyhurtfell.top’ என்று அந்த இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதனை ஆராய உள்ளே சென்று பார்த்தோம்.

அப்போது, ‘https://in.rugbyhurtfell.top/click?key=57ca2184841bec634a1e&account=7&buyer=AGAV&domain=IN.rugbyhurtfell.top’ இதுபோன்ற இணையதள முகவரி கொண்ட ஒரு பக்கம் தோன்றியது. அந்த பக்கம் பாதுகாப்பற்றது என புகார் எழுந்துள்ளதாக மைக்ரோசாப்ட் டிஃபெண்டர் (Microsoft Defender) எச்சரிக்கை விடுத்தது. அந்த வகையில் நாம் ஸ்ரேயா கோஷல் செய்தி வாயிலாகத் திறந்த பக்கம் பிரச்சினைக்குரியது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

எனினும், உள்ளே என்ன தகவல் இருக்கும் என்பதை ஆராய, ‘Continue to the unsafe site’ அதாவது பாதுகாப்பற்ற இந்த தளத்தில் நுழைய வேண்டும் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து முன்னேறி சொன்றோம். அதில், இணையதள முகவரியின் அருகில் ‘அபாயகரமானது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இணைய பாதுகாப்பிற்காக பிரவுசர்களை வழங்கும் நிறுவனங்கள் இதுபோன்ற போலி தளங்களை கண்டறிந்து பயனர் தரவுகளை பாதுகாக்க இந்த எச்சரிக்கைகளை வழங்குகின்றன.

மேலும், திரையில் தோன்றிய தளம் அச்சுஅசலாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போன்றே இருந்தது. அதில் குறிப்பிட்ட செய்தி நிறுவனம் எப்படி செய்திகளை பதிவிடுமோ, அப்படியே இந்த போலி தகவலும் உருவாக்கப்பட்டிருந்தது. மிக முக்கியமாக ‘Lovarionix Liquidity' என்ற தளத்தின் வாயிலாக நான் வெறும் ரூ.21,000 பணத்தை முதலீடு செய்து பெரும் லாபத்தை அடைந்தேன் எனக் குறிப்பிடப்படிருந்தது. இதிலிருந்து, இது ஒரு மோசடி செய்தி எனவும், பயனர்களிடம் இருந்து பணத்தை கவர இவர்கள் இதுபோன்ற விளம்பர நாடகங்கள் நடத்துவது உறுதியானது.

மேற்கொண்டு, குறிப்பிட்ட அந்த தளத்தை அணுக உள்நுழைந்து பார்த்தபோது, ‘Lovarionix Liquidity’ பெயரிடப்பட்ட தளத்தில் படிவம் ஒன்று காட்டப்பட்டது. அதற்கு மேலாக தினசரி 90,000 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம் என தலைப்பிடப்பட்டிருந்தது. கிடைத்தத் தகவல்களின்படி, இணையவாசிகளின் பணம், தரவுகள் போன்றவற்றிற்கு வலைவிரிக்கும் ஒரு மோசடி தளம் இது என்பது உறுதியானது.

இதுபோன்ற மோசடி செய்திகள் வேறு வெளியாகி உள்ளனவா என்பதை ஆராய, இணைய உலாவியில் தேடினோம். அப்போது உண்மை கண்டறியும் நியூஸ்மீட்டர் தளம் (NewsMeter) இந்த மோசடி தளம் தொடர்பான செய்தியை வெளியிட்டிருக்கிறது.

முடிவு:

மேற்கொண்ட தணிக்கையின் வாயிலாக பிரபலங்களின் பெயர்களில் வரும் இதுபோன்ற கட்டுரைகள், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரிகள் மோசடி குழுக்களால் உருவாக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டது. இணையவாசிகள் எப்போதும் தாங்கள் கிளிக் செய்யும் இணையதள முகவரியை சரிபார்க்கும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Telugu Post என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget