மேலும் அறிய

*ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !

விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் வாரண்ட்

இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியபோது "புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான். விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன். அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி." என்றார்

இயக்குநர் விக்னேஷ் நடராஜன்

நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ-டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பாண்டிராஜ் 

பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். மாமன் படத்திற்கு பிறகு வெப் சீரிஸ் செய்வதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன், அந்தக் கதையை நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான். அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன். விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன், நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன், அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் கவின்

பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார். அட்டகாசமாக இருந்தது. படம் என்று நினைத்துவிட்டேன். கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன். என் அஸிஸ்டெண்ட்கள் வளர வேண்டும், அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார். மகிழ்ச்சி. தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதே போல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.

நடிகை கௌசல்யா

இந்த வெப் சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. எல்லோரும் ஒரே குடும்பம் போல பழகினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது. நான் நடித்திருந்தாலும் இன்னும் முழு கதையும் எனக்கு தெரியாது. அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது” அனைவருக்கும் நன்றி.

நடிகை மீனா

“ZEE5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழு குழுவிற்கும் நன்றி. பிரசாந்த் சார் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த சீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது. “நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையும், அதன் காட்சிப்படுத்தலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” அனைவருக்கும் நன்றி.

நடிகை பூர்ணிமா ரவி

“ஹீரோ மெட்டீரியல் என்று எதுவும் கிடையாது. ஒரு கதையை யார் முன்னின்று கொண்டு செல்கிறார்களோ அவர்கள்தான் ஹீரோ. அந்த திறமை பிரசாந்த் சாருக்கு இருக்கிறது”, “ஆஃப் ஸ்கிரீனிலேயே பெண்களுக்கு மிகவும் பிடித்தவர் பிரசாந்த் சார். இந்த சீரிஸ் வெளியான பிறகு ஆன் ஸ்கிரீனிலும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகும்”.எதிர்பார்ப்பை உயர்த்திய “வாரண்ட்” முழு விழாவும் படக்குழுவினரின் நட்பு, ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் பிரசாந்த் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘விலங்கு’ உலகத்தின் விரிவாக்கமாக உருவாகும் இந்த “வாரண்ட்” வெப் சீரிஸ், ரியலிஸ்டிக் போலீஸ் கதையுடன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியது. என்றார்.

இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து

பிரசாந்த் என் நண்பர், என் படத்திலும் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஹீரோவாக நடிக்கும் எண்ணத்தில் அவர் நடிக்கவில்லை என நினைக்கிறேன். விலங்கு தமிழில் அனைவரையும் கவர்ந்த சீரிஸ். ஒரு படம் எவ்வளவு டீடெய்லிங் எப்படி பண்ண வேண்டும் என்பதை விலங்கு கற்றுத்தந்தது. வாரண்ட் அதே போல மிகச்சிறந்த சீரிஸாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.

கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடர், காவல் துறையின் மறுபக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், மன அழுத்தம், அதிகார துஷ்பிரயோகம், மனித மன மாற்றங்கள் ஆகியவற்றை தீவிரமாக பதிவு செய்யும் வகையில் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் மையக் கதாபாத்திரமாக “கோட்டை கருப்பசாமி” என்ற காவலர் வருகிறார். சாதாரண காவலராக தனது வாழ்க்கையை தொடங்கும் அவர், சமூக அவமானங்கள், அதிகார அழுத்தங்கள் மற்றும் பல்வேறு குற்றவியல் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார். பழைய வாரண்ட் வழக்குகளை விசாரிக்கும் போது, மெதுவாக அவரது மனநிலையும் செயல்பாடுகளும் மாறத் தொடங்குகின்றன. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒருவன், சட்டத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் தருணங்களே இந்த தொடரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

ஒரு லாக்கப் டெத் சம்பவம் கதையை முற்றிலும் திருப்பி விடுகிறது. அதன் பின்னர் உண்மை, பொய், அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதலே கதையின் மையமாக நகர்கிறது. ஒரு காவலரின் உளவியல் மாற்றத்தை மிகவும் ரியலிஸ்டிக்காக பதிவு செய்யும் முயற்சியாக “வாரண்ட்” பார்க்கப்படுகிறது.

இந்த சீரிஸில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா MV, அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை அசோக் குமார், எடிட்டிங் பணிகளை R ராமர் செய்துள்ளனர். கிராமத்து காவல் நிலையங்கள், உள்ளூர் அரசியல், அதிகார மிரட்டல்கள் மற்றும் மனித மனத்தின் இருண்ட பக்கங்களை மிக நெருக்கமாக காட்டும் இந்த தொடர், “விலங்கு” போன்ற ரியலிஸ்டிக் கிரைம் டிராமாக்களை விரும்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“வாரண்ட்” வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
Gatta Kusthi 2 Trailer : ஹோம் மேக்கராக விஷ்ணு விஷால்...அசத்தும் கட்டா குஸ்தி 2 ஆம் பாகத்தின் டிரெய்லர்
Gatta Kusthi 2 Trailer : ஹோம் மேக்கராக விஷ்ணு விஷால்...அசத்தும் கட்டா குஸ்தி 2 ஆம் பாகத்தின் டிரெய்லர்
மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay IAS and IPS Conference : இனி ஒரு குற்றமும் நடக்க கூடாது.! இன்று IAS, IPS அதிகாரிகள் மாநாடு- செம பிளானோடு சிஎம் விஜய்
இனி ஒரு குற்றமும் நடக்க கூடாது.! இன்று IAS, IPS அதிகாரிகள் மாநாடு- செம பிளானோடு சிஎம் விஜய்
DMK PROTEST : விஜய் அரசுக்கு எதிராக திமுகவின் முதல் போராட்டத்திற்கு செக்.! தடை விதித்த போலீஸ்- காரணம் என்ன.?
விஜய் அரசுக்கு எதிராக திமுகவின் முதல் போராட்டத்திற்கு செக்.! தடை விதித்த போலீஸ்- காரணம் என்ன.?
MK Stalin: மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
Toyota Corolla Cross: மஹிந்த்ரா XUV 7XO-விடம் பந்தயம் அடிக்குமா? டொயோட்டாவின் புதிய 7 சீட்டர் - ஹைப்ரிட், 24KM மைலேஜ்
மஹிந்த்ரா XUV 7XO-விடம் பந்தயம் அடிக்குமா? டொயோட்டாவின் புதிய 7 சீட்டர் - ஹைப்ரிட், 24KM மைலேஜ்
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
Recreation Club fees hike : கிளப் மதுக்கூட கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.! 15 லட்சம் டூ 30 லட்சமாக அதிகரிப்பு- வெளியானது அரசிதழ்
கிளப் மதுக்கூட கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.! 15 லட்சம் டூ 30 லட்சமாக அதிகரிப்பு- வெளியானது அரசிதழ்
Embed widget