Britto Mano - Sandhya Ramachandran : ரீல் ஜோடி ரியல் ஜோடியானது... தவமாய் தவமிருந்து பாண்டி - மலருக்கு விரைவில் டும் டும் டும்
பிரிட்டோ மனோவும், மலர் கதாபாத்திரத்தில் சந்தியா ராமச்சந்திரனும் நடித்து வருகிறார்கள். ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக உள்ளனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான சீரியல் 'தவமாய் தவமிருந்து'. TRP ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் இந்த சீரியலில் பாண்டி கதாபாத்திரத்தில் பிரிட்டோ மனோவும், மலர் கதாபாத்திரத்தில் சந்தியா ராமச்சந்திரனும் நடித்து வருகிறார்கள். ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக உள்ளனர்.
பிரிட்டோ மனோ :
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியலில் ரத்னவேல் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பிரிட்டோ மனோ காண காணும் காலங்கள், ராஜா ராணி 2 போன்ற பல சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். நடிகர் மட்டுமின்றி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள பிரிட்டோ மனோ 2022ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற 'டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 4' ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.
View this post on Instagram
சந்தியா ராமசந்திரன் :
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு ஒளிபரப்பான 'கோகுலத்தில் சீதை' சீரியலில் இனியா என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சந்தியா ராமசந்திரன். அதனை தொடர்ந்து தெய்வம் தந்த பூவே மற்றும் தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். சலூன், பேய காணோம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
View this post on Instagram
தவமாய் தவமிருந்து சீரியல் மூலம் அறிமுகமான பிரிட்டோ மனோ - சந்தியா ராமசந்திரன் ஜோடி ரியல் ஜோடிகளாகிறார்கள். இவர்களின் நிச்சயதார்த்தம் ஜனவரி 25ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தவமாய் தவமிருந்து :
பிள்ளைகளே பெற்றோருக்கு துரோகம் செய்வதையும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் தவமாய் தவமிருந்து சீரியலின் கதைக்களம். குடும்ப பின்னணியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் TRP ரேட்டிங்கில் உச்சத்தை தொட்டு சாதனை படைத்து வருகிறது.
இன்றைய சமுதாயத்தில் குடும்பங்களில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் இந்த திரைக்கதை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நகரும் இந்த தொடர் வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் TRB ரேட்டிங்கை விட அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

