Yogi Babu : முருகன் முன்னால் சத்தியம் செய்யட்டும்... பணம் கேட்டதாக சொன்ன யோகிபாபுவுக்கு வலைப்பேச்சு சவால்
நெகட்டிவான கருத்துக்களை சொல்லாமல் இருக்க பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தன்னிடம் பணம் கேட்டதாக நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
யோகிபாபு
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு. அஜித் , விஜய் , ரஜினி உள்ளிட்டவர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வரும் யோகி பாபு இன்னொரு பக்கம் சோலோவாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ஒரே நாளில் இரண்டு மூன்று படங்களில் நடிக்கும் அளவிற்கு பிஸியாக இருந்து வரும் யோகி பாபு மீது பல்வேறு குற்றாச்சாட்டுகள் இருந்து வருகின்றன. குறிப்பாக தான் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வதில்லை என அவர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. தான் வெவ்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருவதால் தன்னால் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிவதில்லை என யோகி பாபு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வலைப்பேச்சு என்னிடம் பணம் கேட்டார்கள்
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் யோகி பாபு பிரபல யூடியூப் சேனலைச் சேர்ந்த சிலர் தன்னைப் பற்றிய நெகட்டிவ கருத்துக்களை சொல்லாமல் இருக்க தன்னிடம் பணம் கேட்டதாக தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகவே அவர் பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு சேனலை குறிப்பிட்டு சொல்வதாகவும் பிஸ்மி , அந்தணன் மற்றும் சக்திவேல் ஆகிய மூவரையே அவர் குறிப்பிடுகிறார் என நெட்டிசன்கள் தெரிவித்து வந்தார்கள் . இப்படியான நிலையில் யோகி பாபுவின் குற்றச்சாட்டிற்கு வலைப்பேச்சு குழுவினர் பதிலளித்துள்ளார்கள்
Shocking allegations !!
— AmuthaBharathi (@CinemaWithAB) August 28, 2024
- YogiBabu accused that Valaipechu has asked money from Yogibabu to not post negative news
- Valaipechu says that they didn't ask money from Yogibabu and they have challenged YogiBabu to promise in front of the Temple pic.twitter.com/fW9cwPzAfI
யோகிபாபு சொல்வதற்கு ஏதாவது சாட்சியம் இருந்தால் அதை அவர் நிரூபித்து காட்டட்டும். அப்படி இல்லை என்றால் தனது குழந்தை உள்ளிட்டவர்களை அழைத்து வந்து கடவுள் முன் சத்தியம் செய்யட்டும். யோகி பாபு உண்மையாகவே ஒரு முருகர் பக்தர் என்றால் தான் சொன்ன கருத்து உண்மை என்று அவர் சத்தியம் செய்ய வேண்டும் என வலைப்பேச்சு குழு தெரிவித்துள்ளார்கள் .