நீச்சல் குளத்தில் யாஷிகா ஆனந்த் ஆனந்த குளியல்... குளத்தில் குதிக்காமல் வியர்க்கும் ரசிகர்கள்!
இத்தனை பிஸிக்கு இடையேயும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் கொஞ்சம் சூடு குறையாமல் பார்த்துக் கொள்கிறார் யாஷிகா.
பிக்பாஸ் பிரபலமாக அறிமுகமாகி, நடிகையாக வலம் வரும் யாஷிகா ஆனந்த். கிளாமர் போட்டோக்களையும், வீடியோ ரீல்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கவே அவரது இன்ஸ்டாகிராமில் பெருங்கூட்டம் பின் தொடர்கிறது.
கடந்த ஆண்டு தோழியோடு பாண்டிச்சேரிக்கு பார்ட்டிக்கு சென்ற யாஷகாவின் கார் விபத்தில் சிக்கியது. அதில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயம அடைந்த யாஷிகா, சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து பெரும் போராட்டத்திற்குப் பின் மீண்டு வந்தார்.
View this post on Instagram
அதன் பின் மெல்ல மெல்ல நடந்து பழகிய அவர், முழுமையாக குணமடைந்து ,மீண்டும் சினிமாவில் தலைகாட்டி வருகிறார். சமீபத்தில் லெஜண்ட் சரவணன் உடன் குத்தாட்டம் போட்ட அவர், எஸ்.ஜே.சூர்யா உடன் ஒரு படம் என பல்வேறு படங்களில் பிஸியாக உள்ளார்.
இத்தனை பிஸிக்கு இடையேயும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் கொஞ்சம் சூடு குறையாமல் பார்த்துக் கொள்கிறார் யாஷிகா. நீச்சல் குளம் ஒன்றில் நீச்சல் உடையில் குளியல் போட்ட யாஷிகா, அதை விதவிதமாக வீடியோ எடுத்து லெகர் படத்தின் பாடலை பின்னணியில் ஒலிக்க வைத்தபடி பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
இதை பார்க்கும் ரசிகர்கள், குளத்தில் குதிக்காமலேயே வியர்த்து வருகின்றனர். ரசிகர்களை சொக்க வைக்க அடுத்தடுத்து ஹாட் போட்டோக்களை போட்டு படுத்தி வரும் யாஷிகா, இன்னும் எத்தனை பாணங்களை ஏவப்போகிறார் என்று ஆவலோடு அவரது பக்கத்தை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் சிலர்.