மேலும் அறிய

SuperStar Rajinikanth: 'அந்த நடை, அந்த ஸ்டைல், அந்த வசீகரம்..' சூப்பர் ஸ்டார் பட்டம் புரோமோஷனா? அடையாளமா?

கோலிவுட்டில் பல ஆண்டுகளாகவே அடுத்த சூப்பர்ஸ்டார் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியிலும், நடிகர்கள் மத்தியிலுமே உள்ளது. ஏனென்றால், அந்த பட்டத்திற்கு அப்படி ஒரு மதிப்பை உருவாக்கியவர் ரஜினிகாந்த்.

'அடுத்த சூப்பர்ஸ்டார் யார்' என்கிற சர்ச்சை கோலிவுட்டில் மீண்டும் எழுந்துள்ளது. யார் சூப்பர் ஸ்டார் என்று கேட்பதற்கு முன்னால், தற்போது மக்கள் கேட்டுவரும் மற்றொரு முக்கியமான கேள்வி சூப்பர் ஸ்டார் என்பது நடிகர்களுக்கான புரோமஷனா? இல்லை அடையாளமா?

சூப்பர் ஸ்டார் பந்தயம்

எப்படியாவது அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்பது மட்டுமே சினிமாவில் நடிகராக வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவரின் லட்சியமாக இருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இளம் நடிகர் வளர்ந்து வரும் சூழலிலும், சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ரஜினிகாந்த்.

அந்த இடத்தை சென்றடைவது அசாத்தியம் என்று தெரிந்த பின் ஒவ்வொரு நடிகரும் தனக்கென லிட்டில் சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, தல, புரட்சித் தளபதி, டாப் ஸ்டார், கேப்டன், மக்கள் செல்வன், சின்ன தளபதி என அவரவருக்கான பட்டங்களை வரையறுத்துக் கொண்டார்கள். ஆனால்  இந்தப் பட்டங்களை சூட்டிக்கொண்ட நடிகர்கள், நாளடைவில் அந்தப் பட்டத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியாமல் சென்ற காலமும் நம் கண் முன்னே கடந்திருக்கிறது.

 ஏன் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார்?

தனது கரியரை வில்லனாகத் தொடங்கியவர் ரஜினி. அதை அவர் திறம்பட நடித்து மக்களிடையே ஒரு வில்லனாக உருவெடுத்திருந்தார். ஆனால் அவரது வில்லன் இமேஜ்,  மற்ற கதாபாத்திரங்களில் அவர் நடிப்பதற்கு சவாலாக இருந்தது. பைரவி படத்தில் அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கும் எண்ணத்தில் தாணு அவருக்கு அந்தப் பட்டத்தைக் கொடுத்தார்.

இவ்வளவு சின்ன வயதில் தனக்கு இவ்வளவு பெரிய பட்டம் வேண்டாம் என்று ரஜினி மறுத்திருக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலை தனது தகுதிக்கு மீறிய அடையாளத்தை சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ரஜினி.  நாளடைவில் அதை மக்கள் மறந்திடலாம் என்று கூட அப்போது அனைவரும் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட அடையாளத்துக்கு நிகராக தன்னை வளர்த்துக் கொண்டார் ரஜினி. இதற்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு அபாரமானது!

ரஜினிக்கு  இருந்த சவால்கள்

ரஜினி நடிகராக உருவான காலத்தில் நடிகர்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன. அவர்களிடம் இருந்து பல திறமைகள் எதிர்பார்க்கப்பட்டன. நன்றாக நடனம் ஆடுவது, ஸ்டண்ட் செய்வது, இயக்குநர்களுக்கு உதவியாளர்களாக இருப்பது என்று அவர்களிடம் ஒரே சமயத்தில் எல்லா வேலைகளும் எதிர்பார்க்கப்பட்டன. ரஜினிக்கு இணையாக கமல் பல்வேறு தளங்களில் தனது திறமைகளை நிரூபித்துக் கொண்டிருந்தார்.

அதே பேட்டர்னை தான் அன்றைய சூழலில் மற்ற நடிகர்களும் பின்பற்றினார்கள். ஆனால் இன்று அவர்களில் பாதி பேர் அடையாளம் தெரியாமல் மறைந்துவிட்டார்கள். ஆனால் ரஜினி தன் மேல் நம்பிக்கை வைத்தார். தன்னால் எதை புதிதாக நிகழ்த்த முடியுமோ அதை செய்தார். சாதாரணமான செய்கைகளை தனது ஸ்டைல் மூலமாக அசாதரணமாக தோன்ற வைத்தவர்.

புரோமோஷனா…? அடையாளமா ?

ரஜினியைவிட திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள். அவரைவிட நன்றாக டான்ஸ் ஆடுபவர்கள் இருக்கிறார்கள். அவரைவிட வசூலை அள்ளிக் குவிக்கும் நடிகர்கள் இருக்கிறார்கள். இளம் வயதில் தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்கள், நல்ல அரசியல் தெளிவுள்ள நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் சூப்பர்ஸ்டார் என்கிற பெயரைச் சொன்னால் ஒரு மனிதரின் நடையும், சிரிப்பும் அவர் ஸ்டைலாக கண்ணாடி மாட்டும் விதமும்  ஓடுவதும் என கருப்பு நிறத்தவரான இந்த ஒரு நடிகர் மட்டுமே கோலிவுட் ரசிகர்கள் கண் முன் வருகிறார்.

நடிகர்களின் உச்சம் எல்லா நடிகர்களைவிடவும் சிறந்தவர் என்பதை சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் சுட்டிக்காட்டாமல், ஒரு நடிகர் தனது வாழ்நாள் முழுவதும் தனது உழைப்பால் ஈட்டிய ஒரு அடையாளமாகக் கூறப்பட்டால், சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்திற்கு ரஜினி முழுமையிலும் முழுமையாக தகுதியானவர். ரஜினியின் திரை வாழ்க்கையைத் தவிர்த்து அவரது பெயருக்கு பின் இருக்கும் பட்டத்தை மட்டுமே சூடிக்கொள்ள நினைப்பது ஒரு அதிகார போட்டியை வளர்ப்பதாக மட்டுமே இருக்கும்.

தலைப்பு செய்திகள்

“நான் சரியான ஆள் இல்லை”.. NTR-ன் அரசியல் திட்டத்தை ரஜினி மறுத்தது ஏன்? இளவரசு பகிர்ந்த தகவல்
“நான் சரியான ஆள் இல்லை”.. NTR-ன் அரசியல் திட்டத்தை ரஜினி மறுத்தது ஏன்? இளவரசு பகிர்ந்த தகவல்
பாலிவுட் முதல் இசைத்துறை வரை.. புதிய CBFC தணிக்கை குழுவில் இடம்பெற்ற 18 பிரபலங்கள்!
பாலிவுட் முதல் இசைத்துறை வரை.. புதிய CBFC தணிக்கை குழுவில் இடம்பெற்ற 18 பிரபலங்கள்!
“இந்த படம் அனிருத்தின் பயணத்தில் திருப்புமுனையாகும்”.. கமல்ஹாசன் சொன்ன வார்த்தைகள்
“இந்த படம் அனிருத்தின் பயணத்தில் திருப்புமுனையாகும்”.. கமல்ஹாசன் சொன்ன வார்த்தைகள்
எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்.. ராஷ்மிகா தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்.. ராஷ்மிகா தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "குடும்ப கட்சியால் பெரியார் சிலையை கட்சி அலுவலகத்தில் வைக்க முடியாது.." திமுக-வை விளாசிய தவெக
MK Stalin:
MK Stalin: "தவெக அரசு படிக்கவைக்காவிட்டால் திமுக படிக்க வைக்கும்.." மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
DMK:
DMK: "மக்கள் வரிப்பணத்தில் இன்பச்சுற்றுலா போனீங்களா விஜய்?" முதலமைச்சருக்கு திமுக சரமாரி கேள்வி
GPS இல்லையா? கனிமம் ஏற்ற PERMIT கிடையாது... குவாரி, கிரஷர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை !
GPS இல்லையா? கனிமம் ஏற்ற PERMIT கிடையாது... குவாரி, கிரஷர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை !
“கட்சியை நடத்த முடியாது… திமுகவில் இணைந்து விடுகிறேன்” என சொன்னவர் தான் துரை வைகோ- கே.என்.நேரு பதிலடி
“கட்சியை நடத்த முடியாது… திமுகவில் இணைந்து விடுகிறேன்” என சொன்னவர் தான் துரை வைகோ- கே.என்.நேரு பதிலடி
Karthigai Deepam: விஷம் குடித்த சாமுண்டீஸ்வரி.. ஏமாந்து போன ராஜராஜன்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விஷம் குடித்த சாமுண்டீஸ்வரி.. ஏமாந்து போன ராஜராஜன்! கார்த்திகை தீபத்தில் இன்று
அரைகுறை ஏற்பாடுகள்.. பக்தர்கள் மீது புனிதநீருக்கு பதிலாக தண்ணீரா? கொந்தளித்த வானதி சீனிவாசன்
அரைகுறை ஏற்பாடுகள்.. பக்தர்கள் மீது புனிதநீருக்கு பதிலாக தண்ணீரா? கொந்தளித்த வானதி சீனிவாசன்
VS Babu Health Report : 9வது நாளாக சிகிச்சையில் கொளத்தூர் எம்எல்ஏ V.S.பாபு.! இப்போ உடல் நிலை எப்படி இருக்கு- மருத்துவமனை அறிக்கை
9வது நாளாக சிகிச்சையில் கொளத்தூர் எம்எல்ஏ V.S.பாபு.! இப்போ உடல் நிலை எப்படி இருக்கு.? மருத்துவமனை அறிக்கை
Embed widget