மேலும் அறிய

Jana Nayagan Trailer: ரிலீஸ் தேதியை குறித்த விஜய்.. புது ட்ரெய்லரோடு வரும் ஜனநாயகன்.. ரசிகர்கள் ஹேப்பி!

விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வந்தது. இப்படத்துக்கு சென்சார் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு 12 கட்களுடன் கூடிய ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா கேரியரில் முதலமைச்சர் விஜயின் கடைசிப்படமான ஜனநாயகன் புது ட்ரெய்லரோடு ரிலீஸ் தேதியும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜனநாயகன் படம்

கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிகப்பெரிய பொருட்செலவில் கமர்ஷியல் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் “ஜனநாயகன்”. விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் அவரது சினிமா கேரியரில் கடைசிப்படம் என அறிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், நரேன், பிரியாமணி, மதன் கௌரி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். விஜயின் சினிமாவுக்கு ஃபேர்வெல் கொடுக்கும் வண்ணம் இந்த படத்தில் இயக்குநர் அட்லீ, லோகேச் கனகராஜ், நெல்சன் திலீப் குமார் ஆகியோரும் நடித்துள்ளார். பாடல் காட்சி ஒன்றில் அனிருத் தோன்றியிருக்கிறார். 

ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி

ஜனநாயகன் படம் ஷூட்டிங் செல்லும்போது 2026 பொங்கலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா போன்றவை மிக பிரமாண்டமாக மலேசியாவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பங்கேற்று விஜய்க்கு ஃபேர்வெல் வழங்கினர். ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் எழுந்தது. ட்ரெய்லர் வெளியானபோது இப்படம் தெலுங்கியில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்பது உறுதியானது. 

சென்சார் சான்றிதழ் பிரச்னை சென்னை உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில் படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகவில்லை. அதேசமயம் தேர்தலில் விஜய் போட்டியிட்டதால் விதிகள் காரணமாக ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

இணையத்தில் கசிந்த முழுப்படம் 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விஜய் முழு வீச்சில் பரப்புரை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது. ஆரம்பத்தில் கிளைமேக்ஸ் காட்சி என சொல்லப்பட்ட நிலையில் முழுப்படமும் வெளியானதால் பேரதிர்ச்சி ஏற்பட்டது. இதுதொடர்பாக சைபர் கிரைமில் புகாரளிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் 1.20 கோடி பேர் பார்வையிட்டது தெரிய வந்தது. இதற்கிடையில் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வந்தது. 

இப்படத்துக்கு சென்சார் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு 12 கட்களுடன் கூடிய ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான போஸ்டர் விஜய் பெயருக்கு முன்னாள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் என குறிப்பிட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Also Read: பாக்யராஜ் மறைந்ததும் வெடித்த சீனியர் - ஜூனியர் மோதல்.. வார்த்தையை விட்ட பார்த்திபன்.. நடந்தது என்ன?

புது ட்ரெய்லருடன் ரிலீஸ் தேதி 

இந்த நிலையில் ஜனநாயகன் படம் வரும் ஜூலை 24ம் தேதி வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. அதற்கு முன்னால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வண்ணம் புது காட்சிகளுடன் கூடிய ட்ரெய்லர் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தங்கள் அபிமான தலைவரை கடைசியாக ஒருமுறை திரையில் காண சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Embed widget