மேலும் அறிய

Hyundai Upcoming SUV: மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை

Hyundai Bayon SUV: மாருதி விக்டோரிஸ் கார் மாடலுக்கு போட்டியாக ஹுண்டாய் நிறுவனத்தின் பேயோன் எஸ்யுவி நடப்பு நிதியாண்டிலேயே சந்தைப்படுத்தப்பட உள்ளது.

Hyundai Bayon SUV: மாருதி விக்டோரிஸ் சிஎன்ஜி எடிஷன் விற்பனையில் அசத்தி வரும் நிலையில்,  ஹுண்டாயின் பேயோன் எஸ்யுவியும் இந்த எரிபொருள் அம்சத்தை பெற உள்ளதாம்.

ஹுண்டாய் பேயோன் எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இரண்டு முற்றிலும் புதிய க்ராஸ் ஓவர் எஸ்யுவிக்களை அறிமுகப்படுத்த ஹுண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது. அதன்படி, முற்றிலும் புதிய பேயோன் க்ராஸ் ஓவர் மற்றும் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆகியவை, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள்ளாகவே விற்பனைக்கு வரவுள்ளதாம்.  அதில் பேயோன் மாடலானது நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவே அறிமுகப்படுத்தப்படும் எனவும், தொடர்ந்து 2027ம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே விற்பனைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் வரவுள்ள புதிய மிட்-சைஸ் எஸ்யுவி ஆனது, நிஜ உலக பயன்பாடு தொடர்பாக அண்மைக்காலங்களாக இந்திய சாலைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஹுண்டாய் பேயோன் - டிசைன் விவரங்கள்

ஆலையில் BC4i என்ற கோட்நேமை கொண்டுள்ள ஹுண்டாய் பேயான், சுமார் 4.2 மீட்டர் நீளம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட வென்யு மற்றும் மிட்-சைஸ் க்ரேட்டாவிற்கு இடையேயான விலை மற்றும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் இடைவெளியை நிரப்பும் மாடலாக வரவுள்ளது. 4.3 மீட்டர் நீளமுள்ள மாருதி விக்டோரிஸை விட, பேயான் மிகவும் கச்சிதமான வடிவம், குறைந்த வீல்பேஸ் மற்றும் சிறிய சக்கர விட்டங்களைக் கொண்டிருப்பதை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உணர்த்துகின்றன.

வளைவான க்ராஸ்-ஓவர் வடிவமைப்பிற்குப் பதிலாக பேயான் ஆனது, ஹுண்டாயின் சமீபத்திய டிசைன் தீம் மூலம் ஈர்க்கப்பட்டு, உயரமான மற்றும் பாக்ஸி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில் உயரமாக பொருத்தப்பட்ட பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் மற்றும் பம்பரில் ஒருங்கிணைக்கப்பட்ட "ஐஸ்-கியூப்" LED புரொஜெக்டர் பிரதான ஹெட்லேம்ப்களைக் கொண்ட பிரிக்கப்பட்ட ஹெட்லேம்ப் அமைப்பு உள்ளது. இந்த SUV 16-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்களில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடைமுறைக்கு உகந்த ரூஃப் ரெயில்கள் மற்றும் கனெக்டட் LED டெயில்-லைட்கள் இருக்கும். 

ஹுண்டாய் பேயோன் - அம்சங்கள், வசதிகள்

பேயான் காரில் உயர்தர சொகுசு அம்சங்கள் மற்றும் வசதிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதன்படி, ஒரு பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், முழு டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளே, கனெக்டட் கார் டெக்னாலஜி மற்றும் ஆட்டோமேடிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய அம்சங்களைக் கொண்ட லெவல் 2  ADAS தொகுப்பு ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Hyundai Upcoming SUV: மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை

ஹுண்டாய் பேயோன் - இன்ஜின் விவரங்கள்

4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட ஹுண்டாய் கார்களிலேயே, தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட CNG கிட்டை கொண்டிருக்கும் முதல் காராக பேயான் சந்தைப்படுத்தப்பட உள்ளது. பூட் ஸ்பேஸை அதிகரிப்பதற்காக இதன் ட்ரங்க் தரைக்குக் கீழே சிறிய இரட்டை சிலிண்டர் அமைப்பு இடம்பெறும். இந்த எஸ்யுவி, 114bhp மற்றும் 144 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1.5-லிட்டர் நேட்சுரலி-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும். இது 6-ஸ்பீட் மேனுவல் அல்லது CVT ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும். ஹூண்டாய் ஒரு புதிய 1.2L டர்போ பெட்ரோல் இன்ஜினையும் தயார் செய்து வருகிறது, இது புதிய பேயான் கிராஸ்-ஓவருக்கு சக்தி அளிக்கக்கூடும்.

இதையும் படியுங்கள்: Hero VIDA VX2 Plus: 4.4KWh பேட்டரி, 187KM ரேஞ்ச் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - EMI-க்கு ரூ.2500 போதும், முழு விவரங்கள்

ஹுண்டாய் பேயோன் Vs மாருதி விக்டோரிஸ்

மாருதி தரப்பில் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வரும் விக்டோரிஸ் காரில், குறிப்பாக சிஎன்ஜி எடிஷன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பணத்திற்கு நிகரான அம்சங்களுடன், கிலோவிற்கு 28 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவது இதற்கு முக்கிய காரணமாகும். சந்தையின் அந்த பிரிவில் போட்டித்தன்மை இன்றி நிலவும் வெற்றிடத்தை, தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள ஹுண்டாய் நிறுவனம் பேயோனை களமிறக்குகிறதாம். விக்டோரிஸ் காரின் விலை வரம்பானது, ரூ.10.50 லட்சத்தில் தொடங்கி ரூ.19.99 லட்சம் வரை (எக்ஸ் - ஷோரூம்) நீள்கிறது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தான் பேயோனின் விலையும் நிர்ணயிக்கப்படுமாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூபாய் 4 லட்சம்தான் விலை.. ஆகஸ்ட் மாத தள்ளுபடி.. தள்ளிட்டுப் போங்க Alto K10 கார்!
ரூபாய் 4 லட்சம்தான் விலை.. ஆகஸ்ட் மாத தள்ளுபடி.. தள்ளிட்டுப் போங்க Alto K10 கார்!
90’ஸ்’ கிட்ஸின் நாயகன்.. அட்டகாசமாய் இருக்கும் நியூ லுக் - இந்த பைக் எப்போது ரிலீஸ் தெரியுமா?
90’ஸ்’ கிட்ஸின் நாயகன்.. அட்டகாசமாய் இருக்கும் நியூ லுக் - இந்த பைக் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Yamaha E Scooters: ஒரே சார்ஜில் 169 கி.மீட்டர் மைலேஜ்... யமஹாவின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? ஓர் அலசல் மக்களே
Yamaha E Scooters: ஒரே சார்ஜில் 169 கி.மீட்டர் மைலேஜ்... யமஹாவின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? ஓர் அலசல் மக்களே
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget