Leo Movie: விஜயின் லியோ படத்தை ஏன் திரையரங்கில் பார்க்கலாம்? நச்சுன்னு 10 பாயிண்ட் இதோ..!
Leo Movie: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தை ரசிகர்கள் ஏன் திரையரங்குகளில், பார்க்க வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Leo Movie: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ள சுவாரஸ்யமான விஷயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
லியோ திரைப்படம்:
விஜய், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் இரண்டாவதாக உருவான திரைப்படம் லியோ. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. ஆக்ஷன் கதைக்களத்தை மையமாக கொண்ட படத்திற்கு, கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் முதல் நாள் வசூல் அமோகமாக அமைந்துள்ளது. அதன்படி, 148.5 கோடி ரூபாயை வசூலித்து நடப்பாண்டில் வெளியான இந்திய திரைப்படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. தொடர்ந்து, அடுத்த 4 நாட்களுக்கும் பொதுவிடுமுறை என்பதால், படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தை ரசிகர்கள் ஏன் திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம் என்பதற்கான சில சுவாரஸ்யமான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Hello records..
— Seven Screen Studio (@7screenstudio) October 20, 2023
He broke you down 🔥
You couldn’t last a day 😎#Leo first day worldwide gross collection is 148.5 crores+ 💥
HIGHEST DAY 1 WORLDWIDE GROSS COLLECTION OF THE YEAR FOR AN INDIAN FILM 🤜🤛#BlockbusterLeo #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers… pic.twitter.com/ssC1Vk5RIx
லியோ படத்தை ஏன் திரையரங்கில் பார்க்கலாம்?
- விஜய் ரசிகராக இருந்தால் எந்தவித சந்தேகமும், கேள்வியுமின்றி தாரளமாக திரையரங்கிற்கு செல்லலாம்
- ஆக்ஷன் படங்கள் பிடிக்கும் என்றால் எந்தவித சந்தேகமும் இன்றி தொடர் விடுமுறயை கொண்டாட லியோ படத்தை திரையரங்கிற்கு செல்லலாம்
- ஒட்டுமொத்த படத்தையும் விஜய் தோளில் சுமப்பதோடு, இதுவரை இல்லாத அளவில் உச்சகட்ட ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார்
- கழுதைப்புலி மற்றும் கார் ஷேஷிங் போன்ற இடங்களில் கிராபிக்ஸ் பணிகள் நன்றாக வந்துள்ளது. இதன் மூலம் லியோ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியில் வலுவாக உள்ளது.
- ஹாலிவுட் பாணியில் கிராஸ் ஓவர் படங்கள் பிடிக்கும் என்றால், அதுவும் லியோ படத்தில் அமைந்துள்ளது
- ”லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்”-ஐ பின்தொடர விரும்புகிறர்வர்களும், லியோ படத்தை பார்க்க வேண்டியுள்ளது
- கைதி மற்றும் விக்ரம் படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தி, லியோவை எல்சியு-வில் எப்படி இணைத்துள்ளனர் என்பதை அறியவும் திரையரங்கிற்கு செல்லலாம்
- டிசி, மார்வெல் போன்ற காமிக்ஸ் கதைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் பிடிக்கும் என்றால் லியோ படமும் உங்களுக்கு பிடிக்க வாய்ப்புண்டு. காரணம் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற புத்தகத்தை மையத்தி தான் லியோ படமும் உருவாகியுள்ளது
- லோகேஷ் கனகராஜின் வழக்கமான பாணியில் லியோவில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள பழைய பாடல்களும் உங்களை கவர வாய்ப்புள்ளது
- அனிருத்தின் இசையும் லியோ படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது