Yakuza ThugLife Movie: 'யகூசா'வுக்கு என்ன அர்த்தம்? புது அவதாரம் எடுத்த கமல்ஹாசன்!
Thug Life Movie: கமல்ஹாசன் பேசியிருக்கும் டயலாக் ’யகூசா’ என்ற வார்த்தை பலராலும் தேடப்பட்டு வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘KH234’ படத்துக்கு 'Thug Life’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் அறிமுக வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் டிரெண்டாகிவருகிறது.
Thug Life டைட்டில் வீடியோ
டைட்டில் அறிமுக வீடியோவில் கமல்ஹாசன் தூத்துக்குடி காயல்பட்டினக்காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். ’ரெங்கராய சக்திவேல் நாயக்கன்’ என்றும், யகூசா ( Yakuza) என்றும், தன்னைப் பற்றி கமல் சொல்லும்படியும் அதிரடி ஆக்சனோடும் டைட்டில் வீடியோ உள்ளது. இதில் கமல்ஹாசன் சொன்ன ’யகூசா’ என்ற வார்த்தை பலராலும் தேடப்பட்டு வருகிறது.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயின்ட் மூவிஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் மணிரத்னம் இயக்கிய ’கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘ஆயுத எழுத்து’ என்ற இரண்டு படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
அன்பறிவு கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் பணியாற்றியிருந்தார். மணிரத்னம், கமல்ஹாசன் இருவரும் இணைந்த ‘நாயகன்’ படம் ஹிட். பலருக்கும் மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக இப்போதும் இருக்கிறது. அப்படியிருக்க இருவரும் இணைந்துள்ள Thug Life பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இதில் ‘யகூசா’ என்று சொல்லப்பட்டிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
‘யகூசா’னா என்ன?
ஜப்பான் மொழியில் ’Yakuza' என்பதற்கு கேங்ஸ்டர், வன்முறைகளில் ஈடுபடுபவர், குற்றம் செய்பவர், மாஃபியா எனும் வார்த்தைகள் பொருளாகக் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் க்ரிமினல். ஜப்பானின் மேற்கு மாகாணங்களின் ’யகூசா’ என்று வார்த்தை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடும் தனிநபர் அல்லது குழுவினர் இப்படி அழைக்கப்படுகின்றனர்.
திட்டமிட்டு குற்றச்செயல்களை புரியும் குழுவினர், தனிநபர் ‘யகூசா’ என்று சொல்லப்படுகின்றனர். இவர்கள் கொலை, கொள்ளை, சூதாட்டம், தினக்கூலி உள்ளிட்ட பல்வேறு செயல்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபர்களாக இருப்பர். அடிப்படையில், அந்தப் பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவகம் உள்ளிட்ட மற்ற தொழில் சார்ந்தவைகளில் உலக அளவிலும் கட்டுப்படுத்தும் திறன்மிக்கவராகவும் யகூசா இருப்பார்களாம்.
எதற்கும் உதாவதவர்களா?
Yakuza - (Image Source - Getty)
யகூசா என்றால் “good for nothing”. எதற்கும் உதவாத நபர் என்று பொருள். யகூசா என்பவரில் மார்சியல் ஆர்ட்ஸ் தெரியாதவர்களும் இருக்கலாம். சாமுராய். ஜப்பானிய போராளி. 1960-களில் ஜப்பானில் 1 லட்சத்து 84 ஆயிரம் யகூசா இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னாளில் எண்ணிக்கை குறைந்துள்ளது. இவர்கள் குற்றவாளிகள் என்று சொல்லப்பட்டாலும், மக்களுக்கு உதவும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளதாக வரலாறு உள்ளது. தேவை உள்ள மக்களுக்கு அடிப்படையான பொருட்களை வழங்குவது, பேரிடர் காலங்களில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது உள்ளிட்ட செயல்களில் யகூசா குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
1960களில் அமெரிக்க அதிபர் ஜப்பான் வருவதாக அறிவிக்கப்பட்டபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட யகூசாக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது அமெரிக்க அதிபர் ஜப்பான் வரவில்லை என்றாலும் ஜப்பானிய அரசு யகூசாவை அழைத்துள்ளது.
நல்லவங்களா, கெட்டவங்களா?
யகூசாக்கள் கெட்டவர்களாக சொல்லப்பட்டாலும் மக்களுக்கு நல்லதும் செய்துள்ளனர். அவர்கள் கெட்டவர்கள் இல்லை என்றும் ஒரு வாதம் இருக்கிறது. “underdogs” என்றும் அழைக்கப்படுகின்றனர். 21ஆவது நூற்றாண்டில் ஜப்பான் அரசு யகூசா விசயத்தில் கடுமையான சட்டங்களை அமல்படுத்தியது. இந்தப் படத்தில் யகூசா எனக் குறிப்பிடும் கமல் தன்னை நாயக்கன் என்கிறார்.
Yakuzas (Image Source - Getty)
தமிழ்நாட்டில் யகூசாக்கள் இருக்கிறார்களா?
இவர்கள் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தங்களின் பாதுகாப்பிற்காக அவர்களை எதிர்த்துள்ளனர். இப்படியாக பலர் அரசுக்கு கட்டுப்படாமல் ஒரு பகுதியில் தங்கள் போக்கில் வாழ்ந்து வந்துள்ளனர். இது ஆங்கிலேயர்களை அச்சுறுத்தியுள்ளது. ஆக, நாயக்கரின் வாழ்க்கை, அவர்களின் வாழ்க்கை கதையாக இந்தப் படம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் எப்படி யகூசாவினர் இருந்தனரோ அதைபோல இங்குள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வியலை 'Thug Life' படம் கதைக்களமாக கொண்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்து வரும் அப்டேட்கள் மூலமே கதை எப்படியானது என்ற புரிதலுக்கு வர முடியும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். டைட்டில் வீடியோ இன்று அட்டகாசமாக வந்துள்ள நிலையில், ’Thug Life’ படம் விஷூவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!