மேலும் அறிய

Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?

Karthigai Deepam 2024: கார்த்திகை தீபத் திருவிழா வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும், எந்த எண்ணெயில் ஏற்ற வேண்டும், எந்த திசையில் ஏற்ற வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்

Karthigai Deepam 2024: தமிழ் மாதங்களில் சிறப்பான மாதமாக கார்த்திகை மாதம் கருதப்படுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்னாளில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா அன்று பல்வேறு கோயில்களில் விமர்சையாக தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கார்த்திகை தீபம் வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இதேபோன்று பல்வேறு கோயில்களிலும் சிறிய அளவில் தீபங்கள் ஏற்றுவது, கோயில்களில் மலை மீது தீபம் ஏற்றுவது என பல்வேறு வகைகளில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. 

வீட்டில் தீபம் ஏற்ற சரியான நேரம் என்ன ?

திருவண்ணாமலை மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். அதன் பிறகு நமது வீடுகளில் தீபம் ஏற்றுவது நன்மை பயக்கும்.‌ திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சியளிக்கும், சிவபெருமான் நமது வீடுகளிலும் ஜோதி வடிவாக காட்சி தருவது, ஐதீகமாக பார்க்கப்படுகிறது. 

விளக்கு ஏற்றுவது எப்படி ?

பிற நாட்களில் பல்வேறு திரிகளை பயன்படுத்தி நாம் வீடுகளில் விளக்கேற்றினாலும், திருக்கார்த்திகை தீபத்தன்று, வாழைத்தண்டு திரி, தாமரைத் தண்டு திரி அல்லது தூய காட்டன் திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றுவது மிக உத்தமகமாக பார்க்கப்படுகிறது. தாமரை மற்றும் வாழைத்தண்டு திரி கிடைக்காதவர்கள் தூய காட்டன் திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம். 

எந்த எண்ணெயை பயன்படுத்தி விளக்கு ஏற்ற வேண்டும் ?

பசு நெய்யால் விளக்கேற்றினால் - மனம் ஒருமித்த வளமான வாழ்வு, நல்லெண்ணெய் விளக்கேற்றினால் - செல்வ வளம் செழிக்கும். விளக்கெண்ணெய் விளக்கேற்றினால் - புகழ் சேரும், வேப்ப எண்ணெய் விளக்கேற்றினால் - கணவன் மனைவி ஒற்றுமை.தேய்காய் எண்ணெய் - குலதெய்வ அருள், இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றினால் - ஐஸ்வரியும் பெருகி, வீட்டில் மன நிம்மதி ஏற்படும். 

எவ்வளவு விளக்குகள் ஏற்ற வேண்டும் ? எவ்வளவு நேரம் ஏற்ற வேண்டும் ?

இன்று பல்வேறு விளக்குகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் கார்த்திகை தீபத்தன்று கையால் செய்யப்பட்ட அகல் விளக்கை பயன்படுத்தி தீபம் ஏற்றுவது பாரம்பரியமாக கருதப்படுகிறது. எனவே குறைந்தபட்சம் 3 அகல் விளக்காவது இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வீடுகளில் குறைந்தபட்சம் 27 விளக்குகளை ஏற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். 

வீட்டு வாசலில் போடப்படும் கோலத்தின் மீது கண்டிப்பாக ஒரு விளக்கு ஏற்றி இருக்க வேண்டும். ( கோலத்தின் மீது ஐந்து முக குத்துவிளக்குகளை ஏற்றி வழிபடுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது ). குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் அகல்விளக்குகள் எரிவதை முடிவு செய்ய வேண்டும். அலங்கார விளக்குகள் ஆகியவற்றை வசதிக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம்.

எந்த திசையை நோக்கி விளக்கு ஏற்றலாம் ?

கிழக்கு திசையை நோக்கி விளக்குகளை ஏற்றினால் துன்பங்கள் நீங்கும். வடக்கு திசையை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியை கொடுக்கும். மேற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றுவது கடன் தொல்லைகளை நீக்கி செல்வத்தை கொடுக்கும். எக்காரணம் கொண்டும் தெற்கு திசையை நோக்கி தீபங்கள் ஏற்றப்படக்கூடாது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
"நல்ல சம்பளம் வாங்கி தரோம்" WFH வேலை வாங்கி தருவதாக மோசடி.. 15 லட்சம் அபேஸ்! 
Embed widget