Will Smith Chris Rock Slapgate Controversy: "நான் வில் ஸ்மித்தை திருமணம் செய்ய விரும்பவில்லை"- மனைவி ஜடா பிங்கெட் - வைரல் வீடியோ..!
வில் ஸ்மித்தை தான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என அவரது மனைவி பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வில் ஸ்மித்தை தான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும் திருமணத்தின் போது தான் பயங்கரமாக அழுததாகவும் அவரது மனைவி கூறியிருக்கிறார்.
இது குறித்து தி ரெட் டேபுள் டாக் ஷோவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பேசிய அவர், 1997 ஆம் ஆண்டு, வில் ஸ்மித்தை திருமணம் செய்ய இருந்த முன்தினம் மாலை பயங்கரமாக நான் அழுதேன். நான் கடுமையான அழுத்தத்தில் இருந்தேன். நான் ஒரு இளம் நடிகையாக, இளமையாக இருந்தேன். கர்ப்பமாக வேறு இருந்ததால் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. நான் திருமணம் செய்து கொள்ளவே விரும்பவில்லை. நான் கர்ப்பமாக இருந்த போது, எனது அம்மா என்னை வில் ஸ்மித்தை திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினார்.ஆனால் நான் வில் ஸ்மித்தை திருமணம் செய்து கொள்ள விரும்ப வில்லை” என்று பேசினார்.
I never wanted to marry Will Smith - VIDEO
கடந்த மார்ச் 27ஆம் தேதி ஆஸ்கார் விருதுகளில், வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தை நகைச்சுவை நடிகர் கேலி செய்ததை அடுத்து, வில் ஸ்மித் மேடைக்கு வந்து கிறிஸின் முகத்தில் அறைந்தார். அன்று இரவே சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வில் வென்றார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, வில் ஸ்மித் அகாடமி மற்றும் கிறிஸ் ராக் இருவரிடமும் மன்னிப்பு கேட்டார். அவர் அகாடமியில் இருந்து தானாக முன்வந்து ராஜினாமா செய்தார். அகாடமி கடந்த மார்ச் 30ஆம் தேதி நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த நிலையில், நேற்று இந்த விஷயத்தில் தனது முடிவை அறிவித்தது. அதில், வில் ஸ்மித் ஆஸ்கர் விருது விழா அகாடமி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘வில் ஸ்மித்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதுடன், ஆஸ்கார் விழாவில் வில் ஸ்மித்தின் செயல்களுக்கு எவ்வாறு சிறந்த முறையில் பதிலளிப்பது என்பதைப் பற்றி விவாதிக்க ஆளுனர்கள் குழு ஒரு கூட்டத்தைக் கூட்டியது. ஏப்ரல் 8 முதல் 10 வருட காலத்திற்கு, வாரியம் முடிவு செய்துள்ளது. ஸ்மித் எந்த அகாடமி நிகழ்வுகள் அல்லது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்