மேலும் அறிய

Lokesh Kanagaraj: ஒரு நல்ல செய்தி சொல்லட்டா.. ஒரே நாளில் இரண்டு செய்கை.. லியோ அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீடு குறித்த தகவல் தெரிவித்துள்ளா லோகேஷ் கனகராஜ்

லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. தொடர்ந்து மறுநாள் 2வது லுக் போஸ்டர் வெளியானது. அன்று மாலை படத்தில் இடம் பெற்ற ‘நா ரெடி’ பாடல் வெளியானது. விஜய் பாடிய இந்த பாடல் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக இருக்கும் லீயோ படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டை ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

லியோ கூட்டணி 

மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி 2-வது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். இதன் மூலம் விஜய் - த்ரிஷா ஜோடி 15 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ளனர். மேலும் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், மேத்தியு தாமஸ், ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகும் என டைட்டில் வெளியானபோதே அறிவிக்கப்பட்டது. அதற்கேற்றாற்போல் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. 

அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள் 

இதனிடையே சில தினங்களுக்கு முன் லியோ படத்தில் விஜய் தொடர்பான காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக புகைப்படத்துடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அதில், “விஜய்யின் காட்சிகள் நிறைவடைந்தன.  இந்த இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி!” என லோகேஷ் கூறியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து  லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது . இதுதொடர்பாக படக்குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அவர், “லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 6 மாதங்களில் கிட்டத்தட்ட 125 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்தில் தங்களை இணைத்துக் கொண்ட நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி! இந்தப் பயணம் மீண்டும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது! உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் பாய்ஸ்!” என தெரிவித்தார்.

டிரைலர் எப்போது?

தற்போது ரசிகர்களிடம் மிஞ்சியிருப்பது ஒரே கேள்விதான். லியோ படத்தின் டிரைலர் எப்போது வெளியிடப்படும். அண்மையில் பத்திரிகையாளரை சந்தித்த லோகேஷ் கனகராஜ லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் மாதத்தின் நடைபெறும் எனவும் படத்தின் டிரைலரும் அதே நாள் வெளியிடப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Jailer 2 Songs: ”அலப்பற கெளப்பறோம்”..... ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
ரூ.126 கோடி பட்ஜெட்டில் உருவாகும் D56! தனுஷ் - வடிவேலு சம்பளம் எவ்வளவு?
ரூ.126 கோடி பட்ஜெட்டில் உருவாகும் D56! தனுஷ் - வடிவேலு சம்பளம் எவ்வளவு?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்

Embed widget