"வீட்ல என்ன சாப்பாடு?" ரசிகருக்கு நக்கலாக பதில் தந்த ஷாருக்.. சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்விகி
ஸ்விகி டெலிவரி பாய்ஸ் ஷாருக்கானின் வீட்டின் வெளியே நிற்பதை ஸ்விகி டுவீட் செய்தது. ஷாருக்கானுக்கு டின்னர் வழங்கியதை குறிப்பிடும்படியாக இது, ஸ்விகி இந்த புகைப்படத்தை பகிர்ந்தது.
ரசிகர் ஒருவர் வீட்ல என்ன சாப்பாடு என்று கேட்க, ஷாருக்கான், நீங்க ஸ்விக்கில இருக்கீங்களா, இருந்தா சாப்பாடு கொண்டு வாங்க என்று கூற, ஸ்விக்கி சாப்பாடோடு மன்னத் வீட்டு வாசலில் சென்று நின்ற புகைப்படத்தை பகிர்ந்து வருகிறது.
Ask எஸ்ஆர்கே
ஷாருக்கான் சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் அவ்வப்போது ஜாலியாக பேசுவது வழக்கம். ஆனால், இந்த முறை, ஸ்விகியுடன் பேசியது இணையத்தில் வைரலாகி உள்ளது. ட்விட்டரில் "Ask எஸ்ஆர்கே" என்று எப்போதாவது டேக் வெளியிட்டுவிட்டு, ரசிகர்கள் அந்த டேகில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கம். அவர் இதனை செய்யும்போதெல்லாம் அந்த டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும், சில சமயம் உலக அளவில் கூட ட்ரெண்ட் ஆகும்.
Khaana khaaya kya bhai?
— Charts Central Fortgate Trader (@fortgatetrader) June 12, 2023
Kyun bhai aap Swiggy se ho….bhej doge kya?? https://t.co/Jskh69QEqc
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023
மன்னத் வீட்டு வாசலில் ஸ்விகி டெலிவரி பாய்ஸ்
அதே போல நேற்று டேக் வெளியிட்டு கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் ஷாருக். அது நடந்து சிறிது நேரத்தில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் ஸ்விக்கி டெலிவரி செய்யும் டெலிவரி பர்ட்னர்கள் ஷாருக் கானின் மன்னத் வீட்டின் வெளியே நின்று போஸ் கொடுப்பதைக் காண முடிந்தது. ஷாருக்கானுக்கு இரவு உணவை வெற்றிகரமாக வழங்கியதை குறிப்பிடும்படியாக, ஸ்விகியின் அதிகாரப்பூர்வ ஹேண்டிலில் புகைப்படம் பகிரப்பட்டது.
வீட்ல என்ன சாப்பாடு?
இந்த புகைப்படம் பகிரப்பட்டதற்கு காரணம் தெரியுமா? ஆஸ்க் ஷாருக் அமர்வில், ஷாருக்கிடம் ஒரு ரசிகர் கேட்ட கேள்விதான். ஒரு ரசிகர் ஷாருக்கிடம் வீட்ல என்ன சாப்பாடு என்று கேட்டுள்ளார். அதற்கு ஷாருக் அளித்த பதில்தான் ஸ்விகியை இந்த பதிவை வெளியிட வைத்தது. அந்த ரசிகரின் பதிவிற்கு பதிலளித்த ஷாருக், "ஏன் ப்ரதர், நீங்க ஸ்விகில இருக்கீங்களா… சாப்பாடு அனுப்புறீங்களா?", என்று கேட்க. அவரது பதில் ஸ்விகியை இந்த கேள்விக்குள் இழுத்து விட்டது.
hum hain swiggy se, bhej dein kya??? 🥰 https://t.co/iMFJcYksKU
— Swiggy (@Swiggy) June 12, 2023
hum swiggy wale hai aur hum dinner leke aagaye 🥰 https://t.co/iMFJcYjUVm pic.twitter.com/swKvsEZYhC
— Swiggy (@Swiggy) June 12, 2023
உணவு டெலிவரி செய்த ஸ்விகி
அந்த பதிலை குறிப்பிட்டு பேசிய ஸ்விக்கி, "நாங்க ஸ்விகியில இருந்து வர்றோம்… நாங்க சாப்பாடு அனுப்பலாமா?" என்று கேட்டு ஒரு டுவீட் வெளியிட்டது. அதனை வெளியிட்டு சிறிது நேரத்தில் ஷாருக்கானின் மன்னத் வீட்டின் முன்பு ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "ஸ்விக்கில இருந்து டின்னர் கொண்டு வந்துருக்கோம்", என்று டுவீட் செய்தனர்.