மேலும் அறிய

“த்ரிஷா மாதிரி மனைவி.. விஜயகாந்த் இடம்.. வெற்றிமாறன் பட ஹீரோ” - வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் சபதம்!

விஜயகாந்தைப் போல சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பிடிப்பேன். நாளைக்கு நானே நடிகர் சங்க தலைவராக கூட மாறலாம் என வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தைப் போல சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பிடிப்பேன் என சமூக வலைத்தளப் பிரபலம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் சபதம் எடுத்துள்ளார்.

சமூக வலைத்தளம் மூலம் பிரபலாகி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சையமானவர் திவாகர். தன்னை வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் என்றும், நடிப்பு அரக்கன் எனவும் அடைமொழியிட்டு அழைத்துக் கொள்பவர். இவர் தொடர்ச்சியாக சினிமாவிலும் வாய்ப்பு தேடி வருகிறார். 

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், “ மதுரையில் இருந்து சென்னை வந்து சினிமாவுக்கு நுழைந்து மக்கள் மனதில் ஆழமாக பதிந்த விஜயகாந்துக்கு பிறகு அந்த ஊரில் இருந்து யாரும் பெரிதாக வரவில்லை. மதுரை மீனாட்சியம்மன் அருளால் விஜயகாந்தின் காலியான இடத்தைப் பிடிக்க இந்த வாட்டர்மெலன் ஸ்டார் வந்துள்ளேன். இயல், இசை, நாடகத்தை வளர்த்த இடம் தான் மதுரை. அனைவருக்கும் சமபந்தி உணவளிக்க வேண்டும் என தமிழ் கலாச்சாரத்தைப் பின்பற்றியவர் அவர். அந்த பணியை பிரேமலதா தொடர்ந்து செயல்படுத்தி கொண்டு வருகிறார். 

அப்படியாக விஜயகாந்தைப் போல சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பிடிப்பேன். நாளைக்கு நானே நடிகர் சங்க தலைவராக கூட மாறலாம். ஆனால் என்னுடைய கொள்கை, கோட்பாட்டில் இருந்து மாற மாட்டேன். அதாவது எனக்கு அரசியல் வேண்டாம், பொதுமக்களிடம் விளம்பரத்தை திணிக்கக்கூடாது. நான் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோவாக நடித்தால் நிச்சயம் நான் விஜயகாந்த் செய்த பணிகளை மேற்கொள்வேன். நான் அவரை போல தோற்றத்தைக் கொண்டுள்ளேன் என பலர் என்னிடம் சொன்னார்கள். 

மதுரையில் இருந்து வந்தாலும் வடசென்னை போன்ற படங்களில் நான் நடிப்பேன். அது கடவுளுக்கு எனக்கு கொடுத்த வாய்ப்பு என சொல்லலாம். ஏன் நான் அவரின் படத்தில் ஹீரோவாக கூட நடிக்கலாம். வடசென்னை 2 படத்தில் என்னுடைய படத்தில் நான் முக்கிய பங்கு வகிப்பேன் என நினைக்கேன். அதற்கான முயற்சியை மேற்கொள்வேன். மதுரை மாதிரி வடசென்னை கலாச்சாரம் சார்ந்த படங்கள் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்துள்ளது. நான் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருக்கேன். இன்னும் 2 படத்தில் ஹீரோவின் நண்பனாக நடிக்கிறேன். 

பெரிய பெரிய புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பேசியிருக்கிறார்கள். ஏப்ரல், மே மாதத்தில் ஷூட்டிங் இருக்கும். இன்னும் ஒரு வருடத்தில் என்னுடைய படங்கள் வெளியாகும்போது தமிழ்நாடு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். 2கே கிட்ஸ் எனப்படும் இளைஞர்களை நான் கவர் பண்ணி விட்டேன். ஒரு இயக்குநர், இளைஞர்கள் என்னை ஃபாலோ பண்ணுவதாகவும், படம் பண்ணினால் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கலாம் என சொன்னார். 

எனக்கு த்ரிஷா மாதிரி ஒரு நல்ல மனைவி அமைந்தால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அதேபோல் தமன்னாவையும் பிடிக்கும். என்னுடைய வயது பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது" என கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget