Watch Video : டைம் ஆச்சு போகனு பா...சிவகார்த்திகேயன் மேல் அன்பை பொழிந்த இலங்கை ரசிகர்கள்
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் முடிவடைந்தது

பராசக்தி
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். ஶ்ரீலீலா , அதர்வா , ரவி மோகன் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரிக்கிறார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் பராசக்தி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது
இலங்கையில் படப்பிடிப்பு நிறைவு
பராசக்தி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியது. இலங்கையில் பராசக்தி படத்தின் பி.டி.எஸ் வீடியோக்கள் கடந்த சில வாரங்களாக சமூக வலைதளத்தில் வெளியாகி வந்தன.
சிவகார்த்திகேயனை வழியனுப்பி வைத்த ரசிகர்கள்
தமிழ் நாட்டைக் கடந்து இலங்கையிலும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. தற்போது பராசக்தி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நிறைவடைந்துள்ளது. சிவகார்த்திகேயனை ரசிகர்கள் சந்தித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அடுத்தகட்டமாக சென்னைக்கு பராசக்தி படக்குழு திரும்ப இருக்கிறது. படத்தின் முக்கிய காட்சிகளுக்கு பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தொடர இருக்கிறது
Thanks for visiting Sri Lanka, @Siva_Kartikeyan Anna! 🇱🇰❤️
— 𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗦𝗞𝗙𝗖 🇱🇰 (@SriLanka_SKFC) March 27, 2025
Sri Lanka loves you! Can’t wait to see your amazing performance and our beautiful island shine in #Parashakthi! 🎬✨#Sivakarthikeyan #SriLanka #KingSK | #Madharasi | #SLSKFC Follow @SriLanka_SKFC 💙✨ pic.twitter.com/jzIxnUEBD8
பராசக்தி ரிலீஸ் தேதி
பராசக்தி படம் 2026 ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். விஜய் நடித்து வரும் ஜன நாயகன் படமும் இதே பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ரசிகர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

