Watch Video : க்யூட் அலியா - ரன்பீர் கபூர் வீடியோ.. நீங்களும் உங்க காதலரும் இப்டிதானே..
Watch Video : பிரபல நடிகை ஆலியா பட் தனது கணவரான ரன்பீர் கபூரின் கலைந்து இருந்த தலைமுடியை சரி செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பாலிவுட்டின் பிரபல நடிகை ஆலியா பட் தனது கணவரான ரன்பீர் கபூரின் கலைந்து இருந்த தலைமுடியை சரி செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நேற்று மாலை, தனது நண்பரான அயன் முக்கர் ஜீயை பாலிவுட்டின் பிரபல ஜோடியான ஆலியா மற்றும் ரன்பீர் சந்தித்தனர். இவர்கள் மூவர் இருக்கும் வீடியோ, ரசிகர் ஒருவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
View this post on Instagram
அந்த வீடியோவில், நடிகர் ரன்பீர் கப்பூர், அயானை மும்பையில் உள்ள தர்மா ப்ரடக்ஷன்ஸ் அலுவலகத்தில் சந்தித்து அன்பாக கட்டித்தழுவினார். பின்னர், ஆலியாவின் நெற்றியில் முத்தம் பதித்தார். அன்பை வெளிப்படுத்திய- கணவரின் கலைந்த முடியை தன் கையால் சரிசெய்துவிட வந்தார். ரன்பீரே அவரது தலை முடியை சரி செய்தார்.
பின்னர் மூவரும், போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். டி.ஸர்ட், ஜீன்ஸ் உடன் வெள்ளை ஷூக்களை ரன்பீர் அணிந்திருந்தார். அலியா மஞ்சள் நிற சட்டை, ஜீன்ஸ் உடன் ஹீல்ஸ் அணிந்து இருந்தார். இயக்குநர் அயன் கட்டம் போட்ட சட்டை, பேண்ட் மற்றும் ஷூக்களுடன் வருகை தந்தார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் “ரன்பீர் தன முடியை சரி செய்ய ஏன் ஆலியாவை அனுமதிக்கவில்லை? ஆண்கள் எப்போதும் பெண்களை தங்கள் தலைமுடி மீது வைக்க அனுமதிப்பதில்லை. ஏனென்றால் பெண்கள் தங்கள் ஹேர் ஸ்டைலை பாழ் செய்து விடுவர்.” என்றெல்லாம் கமெண்ட்ஸ் செய்து வைத்திருந்தனர்.
View this post on Instagram
ஆலியா மற்றும் ரன்பீர் ஏப்ரல் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள அவர்களின் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான இரு மாதங்களுக்கு பிறகு, ஆலியா கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தியை அறிவித்தனர். சமீபத்தில், பாலிவுட் ஜோடி இருவரும் பிரமாஸ்திராவில் இணைந்து நடித்தனர்.இப்படமானது கலந்த விமர்சனம் பெற்றாலும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது