Vikram Box Office : நாயகன் மீண்டும் வரான்.. உலகளவில் இத்தனை கோடி வசூலா?.. தெறிக்கவிடும் ரசிகர்கள்..
விக்ரம் படம் வெளியான நாள் முதலே தியேட்டர்களில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம், அவரது சினிமா வரலாற்றில் மாபெரும் வசூல் சாதனையை படைக்க காத்திருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த வாரமே 100 கோடியை நோக்கி நடைபோடுகிறது விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன்,விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
In 2 days, #Vikram crosses the ₹ 100 Cr Mark at the WW Box Office..
— Ramesh Bala (@rameshlaus) June 5, 2022
Phenomenal.. 🔥@ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil @Suriya_offl @Dir_Lokesh @anirudhofficial @RKFI @turmericmediaTM
இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் ஆக்ஷன் படம் வெளியானதாலும், படத்தின் அறிவிப்பு தொடங்கி பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, ப்ரோமோஷன் என அனைத்தும் மிக பிரமாண்டமாக நடந்ததால் மொத்த தென்னிந்திய திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது.
இதனால் படம் வெளியான நாள் முதலே தியேட்டர்களில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருப்பதாகவும், பல இடங்களில் நள்ளிரவில் கூடுதல் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி இந்த படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.25 கோடி வசூல் படைத்து கமலின் திரையுலக வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விக்ரம் படம் வெளியான 2 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாகவும், தமிழகத்தில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் விரைவில் தமிழகத்திலும் இப்படம் ரூ.100 கோடி வ்சூலைப் பெற்று சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்