மேலும் அறிய
ஸ்டைலிஷ் கெட்டப்பில் விஜயகாந்தின் மகன்.. அப்பா முக்கியம் பிகிலு என்ற கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்
Shanmuga Pandian: சண்முக பாண்டியனின் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் ‘அப்பா முக்கியம் பிகிலு’ என கிண்டலடித்துள்ளனர். விஜயகாந்த் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சண்முக பாண்டியன்
Shanmuga Pandian: வித்யாசமான கெட்டப்பில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜயகாந்தின் இளையமகனான சண்முக பாண்டியன் 2015ம் ஆண்டு வெளிவந்த சகாப்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தும் படம் தோல்வியை தழுவியது. தொடர்ந்து மதுரை வீரன் படத்தில் சண்முக பாண்டியன் நடித்தார்.
தொடர்ந்து இயக்குநர் யு.அன்பு இயக்கும் படைவீரன் படத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ளார். பார்த்திபன் தேசிங்கு வசனம் மற்றும் திரைக்கதை எழுதும் படத்தில் கஸ்தூரி ராஜா, முனீஸ்காந்த், யாமினி சந்தர், வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்டது.
சண்முக பாண்டியன் திரைப்படம் மட்டும் இல்லாமல் வெப் தொடரிலும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. வேல ராமமூர்த்தி எழுதி இருக்கும் குற்றப்பரம்பரை நாவலை தழுவி சசிகுமார் இயக்க இருக்கும் வெப் தொடரில் சண்முக பாண்டியன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் இசை நிகழ்ச்சியிலும் சண்முக பாண்டியனிற்கு அதிக ஆர்வம் உள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருது பெற்ற புகழ்பெற்ற இசை கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன் பங்கேற்ற இசை நிகழ்ச்சியை சண்முக பாண்டியன் ஏற்று நடத்தினார். மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் கடந்த நவம்பர் மாதம் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திரைப்பட தயாரிப்பு மற்றும் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு துறையில் புகழ் பெற்று விளங்கும் விஜய பிரபாகரனின் வி.ஜெ.பி. (VJP) மற்றும் ட்ராக்டிகல் (Tracktical) கான்சர்ட்ஸ் என்ற இரு முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் இசை ஆல்பம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இசை நிகழ்வில் பங்கேற்றிருந்த சண்முக பாண்டியன் வித்யாசமான கெட்டப்பில் இருக்கும் இருக்கு தனது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
சண்முக பாண்டியனின் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் ‘அப்பா முக்கியம் பிகிலு’ என கிண்டலடித்துள்ளனர். விஜயகாந்த் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்தார்.
மேலும் படிக்க: Entertainment Headlines: விடாமுயற்சி ஷூட்டிங் முதல் ரெடின் கிங்ஸ்லி திருமணம் வரை.. சினிமா டவுண்ட்-அப் இன்று!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement