Raja Rani 2 |ஆல்யாவுக்குத் தான் டாப்.. ஒருநாள் சம்பளமே இவ்வளவா? ராஜா ராணி சீரியல் சம்பள விவரம்!
ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்திலும் ஆல்யா மானசாவே நடித்திருந்தார். முதல் பாகத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்
மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள பல சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. பல திருப்பங்களுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. 2019ம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகமாக இது ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டுக் குடும்பம் கதையை மையமாக வைத்தே இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இதில் நாயகியாக ஆல்யா மானசா நடித்து வருகிறார்.
ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்திலும் ஆல்யா மானசாவே நடித்திருந்தார். முதல் பாகத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆல்யா. இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தாள். குழந்தைக்கு அய்லா என பெயர் வைத்திருக்கின்றனர். குழந்தை பிறப்பிற்கு பின் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த சீரியலின் நாயகனாக திருமணம் சீரியல் புகழ் சித்து நடித்து வருகிறார். சித்து - ஆல்யா இடையேயான ரீல் ஜோடிப்பொருத்தம் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
சம்பளம்..
டிஆர்பி ரேட்டிங்கில் கெத்து காட்டும் சீரியலான ராஜா ராணியின் நாயகன், நாயகிக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சந்தியாவாக நடிக்கும் ஆல்யாவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல, நாயகன் சித்துவுக்கு ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் எனக் கூறப்படுகிறது. ராஜா ராணியின் முக்கிய ரோலே ஆல்யா என்பதால் அவருக்குத் தான் சம்பளம் அதிகம் எனக் கூறப்படுகிறது.
மீண்டும் கர்ப்பம்..
ஆல்யா, தான் மீண்டும் இரண்டாவதாக கருவுற்று இருப்பதை அண்மையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் இரண்டாவது குழந்தை காரணமாக ராஜா ராணி சீரியலில் இருந்து விலகப் போகிறீர்களா எனக் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் முதல் குழந்தை சிசேரியனில் பிறந்ததால் இரண்டாவது குழந்தை நார்மல் டெலிவரியாகப் பெற்றெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இதற்கிடையே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் உரையாடிய அவர், எந்த சீரியலில் இருந்தும் நான் விலகவில்லை சந்தியா என்பது ஒருவர் மட்டுமே. அது நான் மட்டும்தான் என்று தெரிவித்தார்.
அந்த உரையாடலில் இன்னொரு ரசிகர் குழந்தைக்கு என்ன பெயர் வைக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆல்யா, ஆண் குழந்தை பிறந்தால், அர்ஷ் என்றும் பெண் குழந்தை பிறந்தால் லைலா என்றும் பெயர் வைப்பேன் என்றார்.