மேலும் அறிய

ராதிகா கொடுத்த ஷாக்.. திருதிருவென முழிக்கும் கோபி.. செழியனுக்கு பாக்கியா கொடுத்த வார்னிங்... பாக்கியலட்சுமியில் இன்று  

Baakiyalakshmi Oct 18 : கோபிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் என ஷாக் கொடுத்த ராதிகா. மாலினி மீது சந்தேகப்படும் பாக்கியா.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (அக்டோபர் 18) எபிசோடில் கோபி தலைவலி என ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறார். ராதிகா வந்து  கோபியை ஷாப்பிங் போவதற்காக அழைக்கிறாள். "எனக்கு ரொம்ப தலை வலிக்குது. ஆபீஸ்ல நிறைய ஸ்ட்ரெஸ் டென்ஷன். இன்னொரு நாள் போகலாம்" என கோபி சொல்ல, "எனக்கும் ஆபீஸ்ல நிறைய ஒர்க். கோடீஸ்வரன் சார் இல்லாததால ஒர்க் லோட் அதிகம். தினமும் நானும் தலை வலியோட தான் வீட்டுக்கு வரேன். ஆபீஸ் டென்ஷன் எல்லாம் அங்கேயே விட்டுடனும். வீட்டுக்கு கொண்டு வர கூடாது" என்கிறாள் ராதிகா. "நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன்" என கோபி சொன்னதும் ராதிகா சென்று விடுகிறாள்.

அடுத்த நாள் கோபி ஆபீசில் இருந்து வீட்டுக்கு வருகிறார். ராதிகாவும் மயூவும் ரெடியாக இருக்கிறார்கள். கோபிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக "வாங்க நாம ஒரு இடத்துக்கு போயிட்டு வரலாம். நான் உங்களுக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு தரேன் " என சொல்கிறாள் ராதிகா.

ராதிகா கொடுத்த ஷாக்.. திருதிருவென முழிக்கும் கோபி.. செழியனுக்கு பாக்கியா கொடுத்த வார்னிங்... பாக்கியலட்சுமியில் இன்று  

கோபி நைசாக மயூவிடம் விசாரிக்கிறார் ஆனால் மயூ எங்க போகிறோம் என்பதை சொல்லவில்லை. பிறகு ராதிகா "நாம தி. நகரில் இருக்கும் கோல்ட் பேலஸ் போகலாம்" என சொல்ல என்ன "தி. நகரில் பேலஸ் எல்லாம் இருக்கா?" என ஆச்சரியமாக கேட்கிறார். "நான் சொன்னதை நீங்க மறந்தே போயிட்டிங்களா. அம்மாவுக்கு கோல்ட் வாங்கணும் என சொன்னேனே" என சொல்லி கோபியையும் அழைத்து கொண்டு கிளம்புகிறாள். எப்படி ராதிகாவிடம் இருந்து எஸ்கேப்பாவது என புரியாமல் தவிக்கிறார் கோபி.

எழில், பாக்கியா மற்றும் ஜெனி பேசிக்கொண்டு இருக்கும் போது செழியன் வீட்டுக்கு வருகிறான். ஜெனிக்காக ஒரு புடவை கிப்ட் வாங்கி வந்து இருக்கிறான். அதை பார்த்து ஜெனி ஆச்சரியப்படுகிறாள். எழில் செழியனை பார்த்து "உன்னோட பொண்டாட்டிக்கு மட்டும் புடவை வாங்கிட்டு வந்து இருக்க, உன்னை பெத்து வளர்த்த உன்னோட அம்மாவுக்கு எதுவும் இல்லையா?" என ஏத்தி விடுகிறான்.

பின்னர் செழியன் பாக்கியாவுக்கும் ஒரு புடவையை கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறான். ஆச்சரியப்பட்ட பாக்கியா வெளியில் மழை வருகிறதா என எட்டி பார்த்து செழியனை நக்கல் செய்கிறாள்.

ராதிகா கொடுத்த ஷாக்.. திருதிருவென முழிக்கும் கோபி.. செழியனுக்கு பாக்கியா கொடுத்த வார்னிங்... பாக்கியலட்சுமியில் இன்று  
அவர்கள் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கும்போது செழியனுக்கு மாலினியிடம் இருந்து போன் வருகிறது. அதை பாக்கியா பார்த்து விடுகிறாள். "என்ன மா அடுத்தவங்க போனை எல்லாம் எட்டிப்பாக்குற?" என எழில் கேட்கிறான்.  "மாலினி ஏன் உனக்கு அடிக்கடி போன் பண்றா. உன்னை விட்டா வேலை செய்ய உங்க ஆபிஸ்ல வேற ஆளே இல்லையா? நீ எங்கேயும் போக கூடாது" என செழியனிடம் சொல்கிறாள் பாக்கியா. செழியன் "நான் போய் முடியாது என சொல்லிட்டு வந்துதுடுறேன்" என செல்கிறான்.

செழியன் சென்றதும் எழில் பாக்கியாவிடம் "ஏன் செழியனை இப்படி கேட்ட?" என்கிறான். "எனக்கு என்னமோ செழியன் மீது சந்தேகமா இருக்கு. வரவர அவன் நடவடிக்கை சரியில்ல. மாலினி வீட்டுக்கு வந்தாலே செழியன் முகமே மாறிடுது" என்கிறாள் பாக்கியா. "ஆமா நானும் கவனிச்சேன்" என்கிறான் எழில்.

"அமிர்தாவோட அம்மா அப்பா போன் ஏதாவது பண்ணாங்களா?" என கேட்கிறாள் பாக்கியா. "இல்லை போன் பண்ணி ரொம்ப நாளாகுது. நானும் அமிர்தாவும் ஒரு நாள் ஊருக்கு போய் அவங்களை பார்த்துட்டு வரலாம்னு இருக்கோம்" என எழில் சொல்ல "அதெல்லாம்  ஒன்னும் போக தேவையில்லை. அவங்களா போன் பண்ணா பேசிக்கலாம்" என மிரட்டி சொல்லிவிட்டு போக எழிலுக்கு பாக்கியா ஏன் இப்படி பேசணும் என புரியாமல் யோசிக்கிறான். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Embed widget