Leo Success Meet: தொகுதிக்கு 20 பேர்; நேரு ஸ்டேடியத்தில் குவிந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.. சம்பவம் இருக்கு!
தொகுதிக்கு 20 பேர் என விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 4600 பேர் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
Leo Success Event: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்தது. பான் இந்தியா படமாக எடுக்கப்பட்ட லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுவதுமாக ஆக்ஷன் காட்சிகளில் எடுக்கப்பட்டுள்ள லியோ படம் வசூலிலும் சாதனை படைத்தது.
கலவையான விமர்சனங்களை பெற்ற லியோ படம் முதல் நாளில் மட்டும் ரூ.148 கோடி வசூலித்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்திருந்தது. இரண்டு வாரங்களில் சர்வதேச அளவில் லியோ படம் ரூ.540 கோடியை வசூலித்ததாக கூறபப்டுகிறது. இந்த நிலையில் லியோவிற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பை தொடர்ந்து படக்குழு வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யபப்ட்டது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறு இசை வெளியீட்டு விழாவில் விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக விழாவில் பங்கேற்கும் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நுழைவு சீட்டுகள் மற்றும் ஆதார் கொண்டு வர வேண்டும் என்றும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவுக்கான நுழைவு டிக்கெட்டுகளை 234 தொகுதிகளை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வழங்கியுள்ளார். ஒவ்வொரு தொகுதிக்கும் 20 பேர் என முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடப்பட்டுள்ளதாம். லியோ வெற்றி விழாவில் ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் என 4600 பேர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
லியோ படம் ரிலீஸூக்கு முன்னதாக இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தச் சூழலில் இன்று நடைபெறும் லியோ வெற்றி விழாவில், விஜய்யின் பேச்சைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். வழக்கமாக தனது பாணியில் ரசிகர்களுக்கு விஜய் குட்டி ஸ்டோரி கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Thangalaan Movie Stills : டீசரே இப்படி இருக்குனா படம் எப்படி இருக்கும்?.. தெறிக்கவிடும் சியான் விக்ரம்!