உங்களுக்கு PCOS இருக்கா? அப்போ இந்த டீ-யை கட்டாயம் ட்ரை பண்ணுங்க

Published by: ABP NADU
Image Source: Meta AI

PCOS-ஆல் அவதிப்படுபவரா நீங்கள்? இந்த 5 பானங்களை உங்கள் டயட்டில் சேர்த்துப் பாருங்கள். இவை உங்கள் ஹார்மோன் சமநிலைக்கும், வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கவும் உதவுகிறது.

புதினா டீ

தேவையில்லாத ஆண்ட்ரோஜன்கள் குறைக்கவும், முகப்பரு வருவதை தடுக்கவும், ஹார்மோன்களை சமநிலையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

எள் - வெந்தய தேநீர்

எள் மற்றும் வெந்தயத்தின் இந்த கலவை இன்சுலின் உணர்திறனை கட்டுக்குள் வைத்திருக்கவும், இன்ஃபிளமேஷனை குறைக்கவும், ஹார்மோன்களை பாதுகாக்கவும் உதவுகிறது.

சங்கு பூ டீ

ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ள இந்த டீ, சீரனத்திற்கும், PCOS சார்ந்த இன்ஃபிளமேஷனைகளை குறைக்கவும் உதவுகிறது.

பட்டை இஞ்சி டீ

இரத்த சர்க்கரையை சீராக்கவும், இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கவும், PCOS சார்ந்த மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்கவும் இந்த டீ உதவுகிறது.

செம்பருத்தி டீ

ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ள இந்த டீ இரத்த அழுத்தத்தை குறைக்கவும், வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கவும், PCOS-ம் போது ஹார்மோன் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.