மேலும் அறிய
Advertisement
Kadaisi Vivasayi: 2 ஆண்டுகளை நிறைவு செய்த கடைசி விவசாயி: விஜய் சேதுபதி நினைவுகூர்ந்த காட்சி!
Kadaisi Vivasayi: கடைசி விவசாயி படம் திரைக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்ததை அந்த படத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி நினைவு கூர்த்துள்ளார்.
Kadaisi Vivasayi: காக்கா முட்டை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிகண்டன். இவரது அடுத்த படைப்பாக 2021ஆம் ஆண்டு வெளிவந்த கடைசி விவசாயி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசி விவசாயி படத்தில் விவசாயியாக நடித்த வயதான நல்லாண்டி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். படத்தில் அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். அழுத்தமான கதையை சொல்லும் கடைசி விவசாயி படத்துக்கு இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி இசையமைத்துள்ளனர்.
விவசாயத்தின் முக்கியத்துவத்தை எளிமையான கிராமத்து பாணியில் கூறும் கடைசி விவசாயி படம் கடந்த ஆண்டு தேசிய விருதுப் பட்டியலில் இடம்பெற்று இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றது. ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டது. மேலும், சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதும் கடைசி விவசாயி படத்துக்கு கிடைத்தது.
இதில் துரதிர்ஷ்டவசமாக கடைசி விவசாயி படம் ரிலீசாவதற்கு முன்னதாக அதில் முக்கிய லீட் ரோலில் நடித்த ஹீரோவான நல்லாண்டி உடல்நல குறைவால் இறந்தார். அதன்பிறகு படத்தின் இயக்குநர் மணிகண்டன், நல்லாண்டி குடும்பத்தாரை கண்டுக்கொள்ளவில்லை என்றும், பண உதவி தரவில்லை என்றும் புகார்கள் எழுந்தன.
இந்தச் சூழலில் கடைசி விவசாயி படம் திரைக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்ததை அந்த படத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 2வது ஆண்டை கடந்த கடைசி விவசாயி எனக் குறிப்பிட்டு அதன் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதியின் பதிவை பார்த்த பலரும் அவருக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
2 Years of #KadaisiVivasayi ❤️https://t.co/AUtxDqlW19#2YearsOfKadaisiVivasayi @dirmmanikandan @vsp_productions #TribalArts #ArtistsCoupe #RichardHarvey @Music_Santhosh @7CsPvtPte @iYogiBabu @proyuvraaj pic.twitter.com/v7wl2qr9MU
— VijaySethupathi (@VijaySethuOffl) February 12, 2024
அண்மையில் கடைசி விவசாயி இயக்குநர் மணிகண்டன் வீட்டில் நகை பணம் மற்றும் தேசிய விருதுகள் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உசிலம்பட்டி எழில் நகரில் உள்ள மணிகண்டனின் வீட்டில், இருந்து ரூ. 1 லட்சம் பணம், 5 பவுன் தங்க நகை மற்றும் தேசிய விருதுக்காக ஒன்றிய அரசு வழங்கிய இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Ranveer Singh: என்ன இப்படி இறங்கிட்டாரு - ரன்வீர் நடித்த விளம்பரத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion