Ghilli Box Office: ரூபாய் 20 கோடியை நெருங்கும் வசூல்! பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கில்லி!
விஜய் நடித்த கில்லி படம் ரீ -ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் நிலவரத்தை கீழே விரிவாக பார்க்கலாம்.
கில்லி ரீ ரிலீஸ்:
தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடித்து கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதனை முன்னிட்டு இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. சமீப காலத்தில் திரையரங்கில் வெளியான புதுப்படங்கள் பெரியளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காத நிலையில், விஜயின் கில்லி படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கில்லி படம் வெளியானது. மேலும் மலேசியா , சிங்கப்பூர் , பாரிஸ் உள்ளிட்ட நாடுகளிலுல் இப்படத்திற்கு ரசிகர்கள் பிரம்மாணட வரவேற்பு கொடுத்துள்ளார்கள். இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைப் படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் , நடிகர்கள் , திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.
கில்லி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன்
வெளியான முதல் நாளில் கில்லி படம் தமிழகத்தில் மட்டுமே 4 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. மேலும் உலகளவில் ரூ 10 கோடிகள் வரை வசூல் செய்து சாதனைப் படைத்தது. அண்மைக் கால வரலாற்றில் இதுவரை ரீ ரிலீஸான எந்த ஒரு படத்திற்கு வசூல் ரீதியாக இப்படியொரு வரவேற்பு கிடைத்தது இல்லை. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான லால் சலாம் மற்றும் அயலான் ஆகிய படங்களின் முதல் நாள் வசூலைக் காட்டிலும் அதிக வசூலை கில்லி படம் எடுத்துள்ளது. விஜய் படங்களின் மேல் ரசிகர்களுக்கு இருக்கும் வரவேற்பைக் காட்டுகிறது
#Ghilli RERELEASE TN GROSS—
— Box Office Seven (@BoxOfficeSeven) April 25, 2024
D1 - ₹4 CR
D2 - ₹3.25 CR
D3 - ₹1.58 CR
D4 - ₹1.21 CR
D5 - ₹1.05+ CR
Total TN — ₹11.09 CR (5 DAYS) 🔥🔥🔥
Entered into the TOP-10 2024 TN GROSSERS 🔥🔥🔥 pic.twitter.com/2ejGzkWZRm
தற்போது வெளியாகி ஐந்து நாட்களை திரையரங்கில் கடந்துள்ள நிலையில் கில்லி படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் 11 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் உலகளவில் 15 கோடி வசூல் செய்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் ‘Box Office Seven' தளம் தகவல்கள் வெளியிட்டுள்ளது. மேலும் வர இருக்கக் கூடிய வார இறுதி நாட்களில் 20 கோடி வசூல் இலக்கை கில்லி படம் தொடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தி கோட்
தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். பிரபு தேவா , பிரசாந்த், சினேகா, லைலா, மோகன் ,வைபவ் , பிரேம் ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி இப்படத்தில் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.