Watch Video : ”தவறுகளில் இருந்து கத்துக்கோங்க “ : விஜய் தேவரகொண்டா பதிவிட்ட மோட்டிவேஷ்னல் வீடியோ..
விஜய் தேவரகொண்டா ப்ரமோஷன் நேரத்தில் அதீத ஆட்டிட்டியூட் காட்டுவதாக விமர்சிக்கப்பட்டார்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் லைகர். பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கிய திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. இருந்தாலும் இந்த படத்திற்காக விஜய் தேவரகொண்டா அதீத மெனக்கெடல்களை செய்திருக்கிறார். அந்த வகையில் லைகர் படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சி ஒன்றிற்காக அவர் தீவிர பயிற்சிகளை எடுத்திருக்கிறார். அந்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா பகிர்ந்திருக்கிறார்.
வீடியோ :
View this post on Instagram
இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக “ @andylongstuntteam உடன் மிஸ் ஸ்டண்ட் பயிற்சி. கடினமாக உழைக்கவும், உங்களைத் தள்ளவும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும், நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழவும்" என குறிப்பிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா. லைகர் படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு கேமியோ ரோலில் லைகர் படத்தில் நடித்திருந்தார். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போட்ட பணத்தை எடுப்பதே தயாரிப்பாளருக்கு சவாலாகிவிட்டது. விஜய் தேவரகொண்டா புரமோஷன் நேரத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டதும் இதற்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதீத ஆட்டிட்டியூட் காட்டுவதாக விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில் படத்தின் நஷ்டத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட விஜய் தேவரகொண்டா தன்னுடைய சம்பள பணத்திலிருந்து 6 கோடியை தயாரிப்பாளருக்கு கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
View this post on Instagram
இதற்கிடையில் பூரி ஜெகநாத்துடன் ‘ஜனகனமன’ என்னும் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார் விஜய் தேவரகொண்டா . பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்த ஆக்ஷன் என்டர்டெயின்னரின் இரண்டு ஷெட்யூல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டன. ஆனால் தற்போது படம் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.விஜய் தேவரகொண்டா தற்போது சமந்தாவுடன் , குஷி என்னும் காமெடி காதல் படத்தில் நடித்து வருகிறார். சிவ நிர்வாணாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஜெயராம், சச்சின் கெடக்கர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகினி, வெண்ணெலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.