மேலும் அறிய

Vijay Devarakonda JGM: மிலிட்டரி கெட்டப்பில் அர்ஜுன் ரெட்டி.. வெளியானது JGM போஸ்டர்..

JGM  எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. இப்படம் மிகவும் சவாலான திரைக்கதை கொண்டது. இந்த கதை மிகவும் சிறப்பு வாய்ந்தது, இப்படம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும்  தொடும்.

நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இணைந்து வழங்கும் பிரம்மாண்ட ஆக்சன் படமான ஜன கண மன 3.8.2023 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும்  இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து, மும்பையில் நடந்த நிகழ்வில், தங்கள் அடுத்த திரைப்படமான “JGM”  படத்தை அறிவித்தனர். இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் டிராமா, பன் மொழி இந்திய பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக இருக்கிறது. 

JGM திரைப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்  பூரி ஜெகன்நாத். இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம்,  இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

பூரி ஜெகன்னாத் பகிர்ந்துகொண்டதாவது:-

படம் பற்றி இயக்குனர் பூரி ஜெகன்னாத் பகிர்ந்துகொண்டதாவது.., “எங்கள் அடுத்த திரைப்படமான ‘JGM’ பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. JGM ஒரு வலுவான கதைகொண்ட, அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னர்” என்றார்.

விஜய் தேவரகொண்டா பகிர்ந்துகொண்டதாவது:-

படம் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியதாவது.., “JGM  எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. இப்படம் மிகவும் சவாலான திரைக்கதை கொண்டது. இந்த கதை மிகவும் சிறப்பு வாய்ந்தது, இப்படம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும்  தொடும்.  இயக்குநர் பூரி ஜெகன்நாத் அவர்களின் கனவுத் திரைப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். சார்மி மற்றும் அவரது குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். JGM படத்தில் எனது கதாபாத்திரம் இதுவரை நான் செய்திராத புதுமையான பாத்திரம், மேலும் இது பார்வையாளர்களிடம் ஒரு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

ஸ்ரீகாரா ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் வம்ஷி பைடிப்பள்ளி கூறுகையில், “இந்த அற்புத திரைப்படமான  JGM படத்தில் விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படம் ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் தட்டிவிடும் என்று ஸ்ரீகாரா ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் அனைவரும்  நம்புகிறோம்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2022  துவங்கி, உலகின் பல இடங்களில் நடைபெறவுள்ளது. JGM படம்  பூரி கனெக்ட் & ஸ்ரீகாரா ஸ்டுடியோ இணை தயாரிப்பு ஆகும். சார்மி கவுர், ஸ்ரீகாரா ஸ்டுடியோ தயாரிப்பாளர் வம்ஷி பைடிப்பள்ளி, ஸ்ரீகாரா ஸ்டுடியோவின் இயக்குனர் சிங்கராவ் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கும் இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர், 3 ஆகஸ்ட் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget