Trisha Wishes Vijay: The Calm To Storm.. தி கோட் பட ஃபோட்டோவுடன் விஜய்க்கு நச் வாழ்த்து பகிர்ந்த த்ரிஷா!
Trisha's Birthday Wish to Vijay: தான் சென்ற ஆண்டு விஜய்யை வாழ்த்திய அதே எமோஜிக்களைப் பகிர்ந்து அதனுடன் தி கோட் ஷூட்டிங் தள புகைப்படத்தினையும் த்ரிஷா பகிர்ந்துள்ளார்.
தி கோட் பட லுக்கில் இருக்கும் நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகை த்ரிஷா (Trisha) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் டூ திரைத்துறையினர் வாழ்த்து
தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி சமீபத்தில் அரசியலில் கால்பதித்த நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள், நேற்று அவரது ரசிகர்களால் கோலாகமாகக் கொண்டாடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி பலரும் வாழ்த்து மழையைப் பொழிந்தனர்.
மற்றொருபுறம் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்கு நேரில் உதவும்படி தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டிருந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் கட்சியினரால் முன்னெடுக்கப்படவில்லை.
தி கோட் அப்டேட்
இதனிடையே அடுத்தடுத்த தி கோட் பட அப்டேட்களுடன் இயக்குநர்கள் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், அட்லீ, அனிருத் உள்ளிட்ட திரைத்துறையினரும் மறுபுறம் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அந்த வரிசையில் பிரபல நடிகையும் நடிகர் விஜய்யுடன் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருமான த்ரிஷா, ஸ்பெஷலான வாழ்த்துப் பதிவினை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தி கோட் படத்தில் நடிகை த்ரிஷா சிறப்புத் தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள நிலையில், தி கோட் பட லுக்கில் இருக்கும் விஜய்யுடன் லிஃப்ட்டில் இருக்கும் செல்ஃபி பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.
த்ரிஷாவின் ஸ்பெஷல் வாழ்த்து
இதனுடன் தான் சென்ற ஆண்டு வாழ்த்திய அதே எமோஜிக்களைப் பகிர்ந்து அமைதியில் இருந்து புயல். புயலில் இருந்து அமைதி.. இன்னும் பல மைல்கற்களை அடைய வாழ்த்துகள் என வாழ்த்தியுள்ளார்.
The calm to a storm,The storm to a calm!
— Trish (@trishtrashers) June 23, 2024
To many more milestones ahead🎂🎈
♥️♾️🧿 pic.twitter.com/k4ZK75v7PZ
சென்ற ஆண்டு லியோ படத்தின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தினைப் பகிர்ந்து வாழ்த்திய த்ரிஷா, இந்த ஆண்டு தி கோட் பட புகைப்படத்தினைப் பகிர்ந்து வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Chinna Chinna Kangal Song Lyrics: யுத்தம் புரிகிற மண்ணில், ரத்த பந்தம்போல் பலமில்லை.. விஜய்யின் தி கோட் 2வது பாடல் வரிகள்!