Shakthi Thirumagan Review : விஜய் ஆண்டனியின் 25 ஆவது படம் சக்தி திருமகன் எப்படி இருக்கு...விமர்சனம் இதோ
Shakthi Thirumagan Review in Tamil : அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 25 ஆவது படமாக உருவாகியிருக்கும் சக்தி திருமகன் படத்தின் சமூக வலைதள விமர்சனங்களைப் பார்க்கலாம்

விஜய் ஆண்டனியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ளது சக்தி திருமகன் . அருவி , வாழ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அருண் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து அவரே இசையமைத்தும் இருக்கிறார். வாகை சந்திரசேகர், சுனில் கிருபலானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரா, கிரண், ரினி, ரியா ஜித்து மற்றும் மாஸ்டர் கேசவ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விறுவிறுப்பான பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள சக்தி திருமகன் படத்திற்கு ரசிகர்கள் என்ன விமர்சனம் வழங்கியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
#ShakthiThirumagan first half is solid and gripping 👌👌👌 Striking resemblance to many state and central politicians, bureaucrats, political advisors, and political YouTube channels. Brilliant work so far from director @ArunPrabu_ . @vijayantony is tailor made actor for this…
— Rajasekar (@sekartweets) September 19, 2025
சக்தி திருமகன் விமர்சனம்
"அண்மை காலங்களில் வந்த பொலிட்டிக்கல் த்ரில்லர் படங்களில் மிக சுவாரஸ்யமான படமாக உருவாகியுள்ளது சக்தி திருமகன் திரைப்படம் . ஒரு நொடி கூட சலிப்புத் தட்டாமல் சுவாரஸ்யமாக செல்கிற முதல் பாதி. இரண்டாம் பாதியில் ஒரு சில லாஜிக் ஓட்டைகளை தவிர்த்து தரமான திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர் அருன்பிரபு. அரசியல் களத்தில் நிலவும் அதிகாரப் போட்டி , ஊழல் , போன்ற விஷயங்களை மிக சுவாரஸ்யமான முறையில் காட்சிபடுத்தியிருக்கிறார்கள். இதில் பல கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் சமகால பிரச்சனைகளை நினைவுபடுத்துகின்றன. விஜய் ஆண்டியின் 25 ஆவது படமாக சக்தி திருமகன் ஒரு நல்ல தேர்வு" என விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நாயகன் கதாபாத்திரம் விஜய் ஆண்டனிக்காகவே எழுதப்பட்ட ஒரு கதாபாத்திரமாக அமைந்துள்ளது. அதில் அவர் மிக சிறப்பாக நடித்து உள்ளார். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
#ShakthiThirumagan at interval. Excellent first half. Easily, the most engaging film about the dirty world of power politics, scams and lobbyists in recent years. Not a single dull moment in the entire first half and the storytelling is so tight and gripping. Solid pick by… pic.twitter.com/0IWDH4KCy9
— Haricharan Pudipeddi (@pudiharicharan) September 19, 2025





















