நடிகர் வெற்றி நடித்துள்ள சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் திரை விமர்சனம்
நடிகர் வெற்றி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து த்ரில்லர் படமாக உருவாகியுள்ள சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் படத்தின் திரை விமர்சனத்தைப் பார்க்கலாம்

சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மை.கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்
விமர்சனம்
பிரபல கிரைம் த்ரில்லர் எழுத்தாளரின் மகனான வெற்றி தனது தந்தையைப் பற்றிய தகவல்களை பகிர மதுரையில் இருந்து சென்னை வருகிறார். வந்த இடத்தில் போலீஸ்காரர் தம்பி ராமையாவுடன் பழக்கம் ஏற்பட அவருக்கு பல கிரைம் கேஸ்களில் தனது புத்திசாலித்தனத்தால் உதவி செய்கிறார். அப்படி ஒரு இளம் பெண்ணின் கொலையை விசாரிக்க உதவி செய்கையில் அதே போல் பல பெண்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுவதை கண்டுபிடிக்கிறார். இந்த கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸூக்கு வெற்றி எப்படி உதவுகிறார் என்பதே படத்தின் கதை.
கொலையாளியை கண்டுபிடித்ததும் படம் வேறு ஒரு கதையை நோக்கி செல்வதால் படம் சுவாரஸ்யம் இழக்கிறது. கொலைகாரனை கண்டுபிடிக்க போலீஸ் வெற்றியின் உதவியை நாடினாலும் எல்லா இடங்களிலும் ஹீரோவை மட்டுமே மையப்படுத்தி காட்சிகள் இருப்பது பல இடங்களில் ஓவராக தெரிகிறது. தம்பி ராமையாவுக்கு படத்தில் நகைச்சுவை ,செண்டிமெண்ட் என வெவ்வேறு காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உணர்ச்சிவசமான காட்சிகளில் ஸ்கோர் செய்தாலும் காமெடி காட்சிகள் பெரிதாக வர்க் அவுட் ஆகவில்லை. ஷில்பா மஞ்சுநாத்க்கு பெரியளவில் கதாபாத்திர முக்கியத்துவம் இல்லை. படத்திற்கு என தனியாக ஒரு முரட்டு வில்லனை பிடித்து நடிக்க வைத்துள்ளார்கள்.
முன்னதாக ஜீவி , பம்பர் போன்ற மாறுபட்ட கதைக்களங்களை தேர்வு செய்து நடித்த வெற்றி இந்த முறையும் வித்தியாசமான ஒரு கதையில் நடித்துள்ளார். ஆனால் எல்லா படங்களிலும் அவரது நடிப்பில் பெரியளவில் வித்தியாசம் காட்டாதது ஒரு விதமான சலிப்பை ஏற்படுத்துகிறது. கூடுதலாக இப்படத்தில் அவர் ஆக்ஷன் ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார்.





















