மேலும் அறிய

Director Viswanath: தாதா சாகேப் பால்கே விருது வென்ற மூத்த இயக்குநர், பிரபல நடிகர் கே.விஸ்வநாத் காலமானார்..

பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத் (Director viswanath) உடல்நலக்குறைவால் காலமானார்.

இயக்குனர் கே. விஸ்வநாத் காலமானார்

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான கே.விஸ்வநாத், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  92 வயதான அவர் வயது மூப்பு காரணமாக கடந்த சில காலங்களாகவே, சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவ்வப்போது பல்வேறு கலைஞர்களைத் தன் வீட்டில் சந்தித்து அவர்களுடன் உரையாடி வந்தார். கடந்த நவம்பர் மாதம், நடிகர் கமல்ஹாசன் அவரை நேரில் சந்தித்து ஆசிபெற்றிருந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று நள்ளிரவு அவர் வீட்டிலேயே காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரையுலக பயணம்:

1965-ம் ஆண்டில் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கிய கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ஆத்ம கவுரவம் படத்திற்காக சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதை வென்றார். இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என 50-க்கும் ம்மேற்பட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார். தனது படங்கள் மூலம், பெண்ணுரிமை, சாதி ஏற்றத் தாழ்வு, நிகழ்த்துக் கலைகள் சம்பந்தப்பட்ட படைப்புகள் எனப் பல சமுக விஷயங்களை பேசி இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.  தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை  கமலை வைத்து இயக்கியுள்ளார். இயக்குனர் என்பதை தாண்டி குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா மற்றும் உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

விருதுகள்

 கடந்த 2017ம் ஆண்டு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதோடு,  பத்ம ஸ்ரீ'விருதையும் வழங்கி இந்திய அரசு அவரை  கவுரவித்துள்ளது. இயக்குனர் கே. விஸ்வநாத் 7 முறை நந்தி விருது, 10 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி:

ஐதராபத்தில் வைக்கப்பட்டுள்ள கே. விஸ்வநாத்தின் உடலுக்கு தெலுகு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். இதேபோன்று, இந்தி உள்ளிட்ட பல்வேறு திரையுலகை சேர்ந்தவர்களு, சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஸ்வநாத்தை தனது மாஸ்டர் என குறிப்பிடும் கமல்ஹாசன், நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget