Venkatesh Iyer: பிரபல நடிகையின் போட்டோவுக்கு வெங்கடேஷ் ஐயர் போட்ட கமெண்ட்... வைரலாகும் இன்ஸ்டா ரிப்ளை!
பிரபல கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் ஐயர் நடிகை ஒருவர் குறித்து பதிவிட்ட பதிவு தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
![Venkatesh Iyer: பிரபல நடிகையின் போட்டோவுக்கு வெங்கடேஷ் ஐயர் போட்ட கமெண்ட்... வைரலாகும் இன்ஸ்டா ரிப்ளை! Venkatesh Iyer conversation with actress Priyanka Jawalkar goes viral on social media Venkatesh Iyer: பிரபல நடிகையின் போட்டோவுக்கு வெங்கடேஷ் ஐயர் போட்ட கமெண்ட்... வைரலாகும் இன்ஸ்டா ரிப்ளை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/04/00150d5a540ea9e48b51166e3643a334_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய பிரதேசத்தை சேர்ந்த நடிகை பிரியங்கா ஜவல்கர். தெலுங்கு அறிமுகமான இவர், விஜய் தேவரகொண்டாவின் ‘டாக்ஸிவாலா’ திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானார். இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்போட்டோ ஒன்றை பகிர்ந்தார். அந்தப் போட்டோவை பார்த்த பிரபல கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் ஐயர் போட்டோவிற்கு ரிப்ளை செய்யும் விதமாக ‘க்யூட்’ என்று கமெண்டை தட்டிவிட்டார். இதைப் பார்த்த பிரியங்கா ‘யாரு.. நீங்களா..? என்று ரிப்ளை கொடுக்க, புண்ணியவான் ஒருவன் இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட அந்தப் போஸ்ட் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
View this post on Instagram
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் ஐயர் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களில் மிக முக்கியமானவர். கடந்த வருட ஐபிஎல்-லில் கொல்கத்தா அணி சார்பாக விளையாடிய வெங்கடேஷ் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து கவனம் ஈர்த்தார். இது அவருக்கு 2021 ஆம் ஆண்டின் டி20 உலககோப்பை யில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுத்தந்தது.
உலகக்கோப்பை போட்டியில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை என்றாலும், அவருக்கு பெரிய எதிர்காலம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர் தற்போது கொல்கத்தா அணிசார்பாக விளையாடி வருகிறார். எதிர்பார்த்த அளவிற்கு அவர் விளையாடதா போதும், நிச்சயம் அவரிடம் இருந்து ஒரு நல்ல ஆட்டம் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)