மேலும் அறிய

Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நேற்று காலை குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்திருந்த நிலையில், மாலையில் அதிரடியாக உயர்ந்து அதிரவைத்தது. இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை உயர காரணம் என்ன.?

தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது.  தங்கத்தின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படும். அந்த வகையில் இந்தாண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டிய நிலையில், அடுத்த சில மாதங்களில் 2 லட்சத்தை எட்டும் என நகை வியாபாரிகளால் கணிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக குறைந்து. இதற்கு முக்கிய காரணமாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டாளர்கள் பார்வையானது திரும்பியது. இதனால் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது.

அமெரிக்கா- ஈரான் போர்

இந்த நிலையில் போர் பதற்றம் சற்று ஓய்ந்திருப்பதால் ஹார்மூஸ் வழித்தடத்திலும் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருவதால் கச்சா எண்ணெய் விநியோகம் சீரடைந்துள்ளது. இதனையடுத்து தங்ககத்தின் மீது மீண்டும் முதலீட்டாளர்களின் பார்வை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தை டன் கணக்கில் முதலீட்டாளர்கள் வாங்கி வருவதால் தங்கத்தின் விலையானது தற்போது உயர தொடங்கியுள்ளது.

தொடரும் தங்கம் விலை உயர்வு

  • ஆகஸ்ட் 17-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை.
  • ஆகஸ்ட் 18-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 14,290 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,14,320 ரூபாய்க்கு விற்பனை.
  • ஆகஸ்ட் 19 -ம் தேதி காலையில் சவரனுக்கு  680 ரூபாய் குறைந்து 1,13,640 ரூபாய்க்கு விற்பனையான நிலையில்,மாலையில் அதிரடியாக உயர்ந்தது. , கிராம் ஒன்றிற்கு 195 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,560 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன், 1,15,200 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்த நிலையில், மாலையில் அதிரடியாக தங்கத்தின் விலையானது உயர்ந்து தலை சுற்றவைத்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலையானது ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 200 ரூபாய் உயர்ந்து 14,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து 1,16,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

கடந்த சில நாட்களாக உயராமல் இருந்த வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Apollo Hospitals: ‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget