மேலும் அறிய

Maanaadu 2 | ‛மாநாடு கொஞ்சம்... மங்காத்தா கொஞ்சம்’ - மாநாடு 2 பிளானை பகிர்ந்த வெங்கட் பிரபு!

இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் மாநாடு 2 உருவாக வாய்ப்பிருக்கிறதா என கேள்வி கேட்க இயக்குநர் அதற்கு பதிலளித்தார்.

சிலம்பரசன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் முதன் முறையாக வெளியான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட். படம் வெளியாவதற்கு முன்பு பல இன்னல்களை சந்தித்திருந்தாலும் , வெளியான பிறகு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை குவித்து வருகிறது. முன் எப்போதும் சிம்பு படங்களுக்கு கிடைக்காத வெற்றி மாநாடு படத்திற்கு கிடைத்திருக்கிறது. சமீப காலமாக கோலிவுட்டில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்த சிலம்பரசனுக்கு , மாநாடு திரைப்படம்  மாபெரும் கம் பேக்காக பார்க்கப்படுகிறது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் , இன்றும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் மாநாடு 2 உருவாக வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி கேட்க , அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு , நிச்சயமாக மாநாடு 2 எடுப்பதற்கான திட்டம் இருக்கிறது. அதில்  மாநாடு படத்தில் பிரபலமான டைம் லூப்பை பயன்படுத்தி மங்காத்தா மற்றும் மாநாடு கதாபாத்திரங்களை ஒன்றாக இணைக்கும் திட்டம் தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

தற்போது தனக்கான கமிட்மெண்டுகளை முடித்து மீண்டும் மாநாடு 2 படத்திற்கான படப்பிடிப்புகளை துவங்குவாராம் வெங்கட் பிரபு. மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க , யுவன் சங்கர் ராஜா,இசையமைத்துள்ளார். 'மாநாடு' படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்கி அமரன், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்தில் சிம்பு அப்துல் காதர் என்னும் இஸ்லாமிய இளைஞராக வலம் வருகிறார். தனது நண்பனுக்காக இரத்த தானம் செய்ய முற்படும் பொழுது , சிம்பு டைம் லூப்பில் மாட்டிக்கொள்கிறார். அப்போது நடக்கும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வும்தான் படத்தின் கதை.படம் முதல் வாரத்தில் 30 கோடி ரூபாயை தாண்டி வசூல் வேட்டை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget