Gautham Vasudev Menon: வெந்து தணிந்தது காடு பார்ட் -2 எப்படி இருக்கும்..? கெளதம் மேனன் ஓப்பன்!
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பார்ட் - 2 எப்படி இருக்கும் என்பது குறித்து இயக்குநர் கெளதம் மேனன் பேசியிருக்கிறார்.
![Gautham Vasudev Menon: வெந்து தணிந்தது காடு பார்ட் -2 எப்படி இருக்கும்..? கெளதம் மேனன் ஓப்பன்! vendhu thanindhathu kaadu part 2 like poetry says director Gautham Vasudev Menon Gautham Vasudev Menon: வெந்து தணிந்தது காடு பார்ட் -2 எப்படி இருக்கும்..? கெளதம் மேனன் ஓப்பன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/17/3dfe5b12cfb9d106ab7a50c457b3f4251663397170258175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பார்ட் - 2 எப்படி இருக்கும் என்பது குறித்து இயக்குநர் கெளதம் மேனன் பேசியிருக்கிறார்.
இது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கும் கெளதம் மேனன் , “ வெந்து தணிந்தது காடு” படத்தின் பார்ட் 2 நீங்க நினைக்கிற மாதிரி மாஸ் கமர்சியல், மசாலா படமா இருக்காது. அதுதான் நாங்க எடுக்க நினைக்கிற நாயகன்.
View this post on Instagram
பார்ட் 1 ல கிளைமேக்ஸ் -ல சிலம்பரசன் கேங்ஸ்டரா மாறியிருப்பாரு. அவர் எப்படி கேங்ஸ்டரா மாறுனாரு அப்படிங்கிறதுதான் வெந்து தணிந்தது பார்ட் 2 வோட கதை. அந்த பார்ட் 2 வ நாங்க ஒரு கவிதை மாதிரிதான் சொல்லப்போறோம். நிச்சயம் அது பெரியபடமா இருக்கும். ஆனால் மாஸ் ஆக்சன் படமா இருக்காது.” என்றார்.
மல்லிப்பூ பாடல் உருவான கதை
அதே போல மல்லிபூ பாடல் குறித்து பேசும் போது, “ நான் சிச்சுவேஷன் சொன்னப்ப ஏ.ஆர்.ரஹ்மான் சார் இந்த இடத்துல ஒரு பாட்டு இருந்தா நல்லயிருக்கும்ன்னு சொன்னார். ஒரு பல்லவியா கூட இருக்கலாமே.. மனைவிக்கிட்ட பேசுற அவன் ஒரு பாட்டு பாடுனா எப்படி இருக்கும்னு சொல்லி ஒரு பாட்டு வைக்கலாமேன்னு சொன்னார். அதைத்தான் நான் அப்படியே சீனா வைச்சேன்” என்றார்.
View this post on Instagram
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்தப்படத்தில் சிலம்பரசனின் நடிப்பும், ஏ.ஆர்.ஆரின் இசையும் பெரிதளவில் பாராட்டைப் பெற்று வருகிறது.
படத்தின் முழு விமர்சனத்தை படிக்க: வேக்காடா? அரை வேக்காடா? ‛வெந்து தணிந்தது காடு... விமர்சனம் தரும் ABP நாடு!’
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)