HBD Sridivya : ஐயையோ பாக்காத ! ஸ்ரீதிவ்யா எங்கே போனாயோ? ஏக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்
சிவகார்த்திகேயன் ஜோடியாக 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீதிவ்யாவின் பிறந்தநாள் இன்று!
ஊதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்... என இளவட்டங்களை எல்லாம் அறிமுகப் படத்திலேயே அலைய விட்ட க்யூட்டான நடிகை ஸ்ரீதிவ்யா. சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். இந்த குட்டி தேவதை இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஹேப்பி பர்த்டே ஸ்ரீதிவ்யா !
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் :
குட்டியா, க்யூட்டா ஒரு பொண்ணு சூப்பரா நடிச்சுது ஆனா அத கொஞ்ச நாளா எந்த படத்திலயும் பார்க்கவே முடியலையே பா! என்பதிலேயே ரசிகர்களின் ஏக்கம் தெரிகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யா 2000-ஆம் ஆண்டு வெளியான 'ஹனுமான் ஜங்ஷன்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். தெலுங்கு தொலைக்காட்சியிலும் நடித்ததன் மூலம் பிரபலமானார். அப்படியே வெள்ளித்திரை வாய்ப்பு பெற்று 2010ம் ஆண்டு 'மனசரா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அடுத்தடுத்த கமிட்மென்ட் :
பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஸ்ரீ திவ்யாவிற்கு குவிந்தன. மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'காக்கிசட்டை', விஷ்ணு விஷால் ஜோடியாக 'ஜீவா', விக்ரம் பிரபு ஜோடியாக ' வெள்ளக்கார துறை', அதர்வா ஜோடியாக 'ஈட்டி', ஜீவா ஜோடியாக சங்குலி புங்குலி கதவை தர', பெங்களூர் நாட்கள், பென்சில் என அடுத்தடுத்து ஏராளமான படங்களில் கமிட்டானார். அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. இப்படி மிகவும் பிஸியான ஒரு நடிகையாக இருந்து வந்த நடிகை ஸ்ரீதிவ்யா இப்போது எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது தெரியாமல் மிகவும் வருத்தத்தில் உள்ளனர் வாலிப சங்க விடலை மைனர்கள்.
விரைவில் அவர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பது தான் அவரின் ரசிகர்களின் பிறந்தநாள் அன்று அவரிடம் வைக்கும் கோரிக்கையாகும். பாக்காத பாக்காத என எங்களை சொல்லி விட்டு எங்கே சென்றாயோ!