மேலும் அறிய

Varisu vs Thunivu : அஜித்திற்கு சிறுத்தை சிவாபோல, விஜய்க்கு வம்சியா.. எப்படி இருக்கு வாரிசு ட்ரெய்லர்?

Varisu Trailer vs Thunivu Trailer: வாரிசு படத்தின் ட்ரெய்லரை பார்த்த சிலர், இது கோலிவுட் நடிகர் நடிக்கும் கமர்ஷியல் தெலுங்கு டெம்ப்ளேட் படமாகும் என்று தெரிவித்து வருகின்றனர்.

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின்னர், இன்று வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா இல்லையா என்பதை பார்ப்போம்.

தமிழகத்தை பொருத்தவரை, எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் ஆகிய ஹீரோக்களுக்கு அடுத்து, இந்த தலைமுறையின் பெரிய நாயகர்களாக அஜித் - விஜய் கொடிகட்டி பறந்து வருகின்றனர். அஜித் - விஜய் என்ற இவர்களின் பெயர்களுக்காகவே, திரையரங்களுக்கு வந்து அவர்களின் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் கூட்டமும், முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் கூட்டமும், கதை சிறப்பாக இல்லையென்றாலும் படத்தை பார்க்க வரும் கூட்டமும் உள்ளனர்.

Varisu vs Thunivu : அஜித்திற்கு சிறுத்தை சிவாபோல, விஜய்க்கு வம்சியா.. எப்படி இருக்கு வாரிசு ட்ரெய்லர்?

ஆரம்ப காலகட்டத்தில் காதல் மன்னர்களாக நடித்து 90’களை கலக்கி வந்த இருவரும் சேர்ந்து “ராஜாவின் பார்வையிலே” படத்தில் மட்டுமே நடித்தனர்.  கடைசியாக, 2014 ஆம் ஆண்டில் அஜித்தின் வீரம்- விஜய்யின் ஜில்லா பொங்கலையொட்டி வெளியாகியது. தற்போது, பல ஆண்டுகள் கழித்து துணிவு - வாரிசு ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதால், அஜித்தின் படமும் விஜய்யின் படமும் நேரடியாக மோதவுள்ளது.

Varisu vs Thunivu : அஜித்திற்கு சிறுத்தை சிவாபோல, விஜய்க்கு வம்சியா.. எப்படி இருக்கு வாரிசு ட்ரெய்லர்?

படம் வெளியாவதற்கு முன்பே, வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, விஜய்தான் நம்பர் ஒன் ஸ்டார் என ப்ரோமோஷன் செய்து வருகின்றார். இந்நிலையில், விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் மாறி மாறி சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டு வருகின்றனர். வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடல் வெளியான பிறகு துணிவு படத்தில் சில்லா சில்லா பாடல் வெளியானது. அதன் பின், தீ தளபதி - காசேதான் கடவுளா பாடலும், சோல் ஆஃப் வாரிசு - கேங்ஸ்டா ஆகிய பாடல்களும் வெளியானது. இதைவைத்து, துணிவு படத்தில் இருக்கும் பாடல்களை விட வாரிசு படத்தில் இருக்கும் பாடல்கள் நன்றாக இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.

Varisu vs Thunivu : அஜித்திற்கு சிறுத்தை சிவாபோல, விஜய்க்கு வம்சியா.. எப்படி இருக்கு வாரிசு ட்ரெய்லர்?

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில், அஜித்தின் விண்டேஜ் வில்லத்தனமும், ஹெச்.வினோத்தின் திரைக்கதையும் நன்றாக பின்னி பிணைந்துள்ளது என்பது தெரிகிறது. இதனால் பொது மக்களிடம் இது நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும், விஜய் ரசிகர்கள் சிலர் “ இதை பார்க்கும் போது பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் போல் உள்ளது” என்றும் “ பீஸ்ட் படத்தில் அஜித் நடித்து இருந்தால் இப்படித்தான் இருக்கும்” என்றும் கமெண்ட்ஸ் செய்து வந்தனர்.

Varisu vs Thunivu : அஜித்திற்கு சிறுத்தை சிவாபோல, விஜய்க்கு வம்சியா.. எப்படி இருக்கு வாரிசு ட்ரெய்லர்?

துணிவு பட ட்ரெய்லர் வெளியான பின், விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தின் ட்ரெய்லருக்காக காத்து இருந்தனர். சிறந்த ட்ரெய்லரை கொடுக்க வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்ததாகவும் அத்துடன், எடிட் செய்யப்பட்டிருந்த ட்ரெய்லரை மீண்டும் எடிட் வேலைக்காக அனுப்பியதாகவும், இதனால்தான் ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திப்போனதாகவும் கூறப்பட்டது. தற்போது, அனைவரின் எதிர்பார்ப்பிற்கு பின் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரை  பார்க்கும்போது, பக்கவான தெலுங்கு படத்தை தமிழ் ஹீரோவை வைத்து எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது வாரிசு ட்ரெய்லர். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், மகேஷ் பாபு மற்றும் ஷ்ருதி ஹாசன் நடித்த “ஸ்ரீமந்துடு” படத்தின் கதை போல் இருக்கிறது. 

வாரிசு படத்தின் கதை  எப்படி இருக்கும்?

நன்றாக வாழும் பணக்கார குடும்பத்தில் திடீர் பிரச்சினை கிளம்புவதும், அந்த குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும் ஹீரோ(விஜய்) அதை எதிர்கொண்டு மீண்டு வருவதும் படத்தின் கதையாக இருக்கும். இதன் இடையில் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் காதலும், காதலியுடன் ரெண்டு பாடல்களும், இளைஞர்கள் எதிர்ப்பார்க்கும் தாறுமாறான சண்டை காட்சிகளும் , குடும்ப ஆடியன்ஸ்களுக்கு அம்மா செண்டிமெண்டும் அதற்காக ஒரு பாடலும் இருக்கும் என்பது தெரிந்துவிட்டது. ஆக மொத்தம் இது கோலிவுட் நடிகர் நடிக்கும் கமர்ஷியல் தெலுங்கு டெம்ப்ளேட் படமாகும்.Varisu vs Thunivu : அஜித்திற்கு சிறுத்தை சிவாபோல, விஜய்க்கு வம்சியா.. எப்படி இருக்கு வாரிசு ட்ரெய்லர்?

வழக்கமாக இது போன்ற படங்களில், அஜித் தொடர்ந்து நடித்து வந்தார். அஜித்தின் விவேகம் படத்தில் காஜலின் காதலும், வலிமை படத்தில் அம்மாவின் செண்டிமெண்டும் படத்தை சொதப்பியது. இதனால் சிலர், அஜித்திற்கு சிறுத்தை சிவா போல, விஜய்க்கு வம்சியா என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Embed widget