Varisu Thunivu Release LIVE: திரையரங்குகளில் வாரிசு, துணிவு கூடுதல் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
Varisu Thunivu Release LIVE Updates: வாரிசு, துணிவு படங்கள் வெளியாவதையொட்டி, படம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.

Background
நடிகர் விஜய்யின் வாரிசு படமும், நடிகர் அஜித்தின் துணிவு படமும் வெளியாவதையொட்டி திரையுலகினர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’. மஞ்சு வாரியர் இப்படத்தின் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. முன்னதாக படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. ட்ரெய்லர் ஜனவரி 4 ஆம் தேதி வெளியானது.
வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களும் நாளை (ஜனவரி 11) ரிலீசாகவுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜனவரி 17 ஆம் தேதி வரையிலான காட்சிகளுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. மேலும் இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் காட்சிகளை ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சியும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் முதல் காட்சியும் திரையிடப்படுகிறது.
Varisu Thunivu Release LIVE: அமெரிக்காவில் மாஸ் காட்டும் அஜித்... வசூல் வேட்டை நடத்தும் துணிவு!
நடிகர் அஜித்தின் திரையுலக வாழ்வில் அமெரிக்காவில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக துணிவு உருவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Thunivu all set to become #Ajith’s career-best in USA pic.twitter.com/olCQZzSLOC
— Rajasekar (@sekartweets) January 11, 2023
Varisu Thunivu Release LIVE: திரையரங்குகளில் வாரிசு, துணிவு கூடுதல் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று வாரிசு - துணிவு படங்களின் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 12, 13, 18 ஆகிய தேதிகளில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,





















