Watch Video: ’வாரிசு’ விஜய்க்கு மீண்டும் சுற்றிப்போட்ட ராஷ்மிகா.... லைக்ஸ் அள்ளும் வீடியோ!
பட பூஜை தொடங்கி தற்போது தியேட்டர் வரை விஜய்க்கு சுற்றிப்போட்டு ரசிக்கும் ராஷ்மிகாவின் செய்கை சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
![Watch Video: ’வாரிசு’ விஜய்க்கு மீண்டும் சுற்றிப்போட்ட ராஷ்மிகா.... லைக்ஸ் அள்ளும் வீடியோ! Varisu premier show Rashmika watching Varisu opening song and vibing for Vijay video goes viral Watch Video: ’வாரிசு’ விஜய்க்கு மீண்டும் சுற்றிப்போட்ட ராஷ்மிகா.... லைக்ஸ் அள்ளும் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/8d180735ea3c8e72e346d20c86e57da71673457713111574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வாரிசு பட ப்ரீமியர் ஷோவில் கலந்துகொண்ட ராஷ்மிகா ‘வா தலைவா’ பாடலுக்கு ‘வைப்’ செய்த வீடியோக்களும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் ரிலீசாக வெளியான வாரிசு படம் குடும்பப் பாசம் - ஆக்ஷன் கலந்த கலவையாக விஜய் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, சம்யுக்தா என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில், வாரிசு படத்தின் பாடல்களும் பட வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக வாரிசு படத்தின் ப்ரீமியர் ஷோவின்போது விஜய்யை பார்த்து குதூகலித்த ராஷ்மிகாவின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வாரிசு படத்தின் ப்ரீமியர் ஷோ முன்னதாக சத்யம் திரையரங்கில் நடைப்பெற்றது. அப்போது தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி, நடிகை ராஷ்மிகா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது வாரிசு படத்தின் ‘வா தலைவா’ பாடலுக்கு நாயகி ராஷ்மிகா ‘வைப்’ஆன வீடியோக்களும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பட பூஜை தொடங்கி தற்போது தியேட்டர் வரை விஜய்க்கு சுற்றிப்போட்டு ரசிக்கும் ராஷ்மிகாவின் செய்கை சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
Looks like our Ranjithame @iamRashmika celebrated #VarisuPremiere to her fullest 😍#BlockbusterVarisu#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @Lyricist_Vivek @7screenstudio @TSeries #Varisu #VarisuPongal pic.twitter.com/egmfGcFWyH
— TheRoute (@TheRoute) January 11, 2023
வாரிசு படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று சத்தியம் திரையரங்கிள் நடைப்பெற்றது. இதில், தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்சி பைடப்பள்ளி, நடிகை ராஷ்மிகா ஆகியோர் கலந்து கொண்டனர். வாரிசு படத்தின் ‘வா தலைவா’ பாடலுக்கு நாயகி ராஷ்மிகா ‘வைப்’ஆன வீடியோக்களும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
முன்னதாக வாரிசு படத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி மகிழ்ச்சியுடன் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ”வாரிசு படத்தின் மீது பொழிந்த இவ்வளவு அன்புக்கும் நன்றி. நண்பா, நண்பிக்களுக்கு நன்றி.. என்னை நம்பியதற்கு தளபதி விஜய்க்கு நன்றி” என வம்சி மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)